வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு மசாலா ஆகியவற்றை சேர்த்து உருவாக்கப்படும் கலவையை கொண்டு ஷகர்கண்டி கீ கபாப் தயாரிக்கப்படுகிறது. இந்த கபாப்கள் இரவு விருந்துக்கு சரியான தேர்வாக இருக்கும். இரவு உணவுக்கு தொடர்ந்து தோசை, இட்லி சாப்பிடுபவர்கள் ஒரு மாற்றத்திற்காக இந்த கபாபை சுவைக்கலாம்.
இந்த கபாப் உருளைக் கிழங்கு மற்றும் மசாலாவின் சுவை நிறைந்துள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவர். இதை சாஸ் அல்லது க்ரீன் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். வாங்க சுவையான ஷகர்கண்டி கீ கபாப் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
500 கிராம் இனிப்பு உருளைக்கிழங்கு வேகவைத்தது, 1 டீஸ்பூன் வறுத்த சீரகம் நசுக்கப்பட்டது. 3-4 முந்திரி பருப்பு நறுக்கியது. 1 பச்சை மிளகாய்,1 பெரிய தக்காளி, 2 டீஸ்பூன் ஸ்ப்ரிங் வெங்காயம், கீரைகள்1 தேக்கரண்டி, ஆம்சூர் தூள் (உலர்ந்த மாம்பழ தூள்), 1 தேக்கரண்டி கரம் மசாலா, 2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள் நறுக்கியது, 3 டீஸ்பூன் வறுத்த கொண்டைக்கடலை மாவு, உப்பு சுவைக்கேற்ப, எண்ணெய் -பொரிப்பதற்கு தேவையான அளவு, 1 தேக்கரண்டி சாட் மசாலா (விரும்பினால்).
செய்முறை
1.வேகவைத்த உருளைக்கிழங்கை மிருதுவாக மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சீரகத்தை லேசாக நசுக்கி உருளைக்கிழங்குடன் சேர்த்துக் கொள்ளவும்.
2.அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய முந்திரி, நறுக்கிய பச்சை வெங்காயம், உலர்ந்த மாம்பழ பொடி, கரம் மசாலா தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை, வறுத்த கொண்டைக்கடலை மாவு , மசித்த உருளைக் கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
3. பச்சை மிளகாய், முந்திரி, மசலா தூள் அனைத்தும் நன்கு கலந்து கபாப் தயாரிக்கும் மாவு பதத்திற்கு மாறும் வரை கிளறி விட வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, மாவை வட்ட வடிவில் தட்டிப் போட்டு கபாப்களை அனைத்து பக்கங்களிலும் சமமாக பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான ஷகர்கண்டிகே கபாப் தயார்.
4.இந்த கபாபை இரவு உணவுக்கு சாஸ் மற்றும் க்ரீன் சட்னி உடன் பரிமாறலாம். பரிமாறும் முன் சாட் மசாலா தூவி பரிமாறினால் சுவை கூடுதலாக இருக்கும். சாட் மசாலா optional தான். தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க