பானிபூரி ப்ரியர்களே! இதோ இனிப்பான மாம்பழ பானிபூரி செய்வது எப்படி என்று காணலாம். 


என்னென்ன தேவை?


பானிபூரி - தேவையான அளவு


மாம்பழம் - 4


தயிர் - ஒரு கப்


சர்க்கரை 


ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்


முளைக்கட்டிய பச்சைப் பயறு - ஒரு கப் 


வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்


சீரகம் - சிறிதளவு


உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்


உப்பு தேவையான அளவு 


ஊற வைத்த சியா - 3 டேபிள் ஸ்பூன்


மாதுளை - ஒரு கப்


பொடியாக நறுக்கிய புதினா இலைகள் - சிறிதளவு


இனிப்பு புளி சட்னி - தேவையான அளவு


செய்முறை:


பானிபூரி வீட்டிலேயே தயாரிக்கலாம்.இல்லையெனில், கடைகளில் இருந்து வாங்கலாம். பானிபூரி தயாரிக்கும் பாக்கெட்கள் கூட கிடைக்கும். அதை வாங்கி எண்ணெயில் பொரித்து எடுத்தால் பூரி தயாராகிவிடும்.


ஸ்டஃப்பிங் தயாரிக்க..



  • பழுத்த மாம்பழங்களை தோல் நீக்கி துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாம்பழ விழுது, புளிக்காத கெட்டித் தயிர், பவுடர் செய்யப்பட்ட சர்க்கரை, ஏலக்காய் தூள் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும். 

  • இப்போது ஆரோக்கியமான முளைக்கட்டிய பச்சைப் பயறு, வேகவைத்த கொண்டைக்கடலை, உப்பு, சீரக தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  • ஊறவைத்த உளுந்தை, உப்பு, பச்சை மிளகாய் சிகப்பு மிளகாய் ஃப்ளேக்ஸ், இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இப்போது இதை மிகச் சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பொரித்தவற்றை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறஅவைக்க வேண்டும். 

  • கெட்டியான புளி தண்ணீர், வெல்லம் இரண்டையும் சேர்த்து கொதிக்க வைத்து இனிப்பு புளி சாஸ் தயார் செய்யவும்.

  • சியா விதைகளை ஊற வைத்து எடுக்கவும். மாம்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். 

  • இப்போது பானி பூரி செய்ய தேவையானவை எல்லாம் தயார். மாம்பழ பானி பூரி செய்யலாம். 

  • பூரிகளுக்கு ஸ்ட்ஃபிங்க் வைக்க ஏதுவாக அதன் மேல்பகுதியை சிறிய அளவில் உடைக்கவும். இப்போது அதில், ஊறவைத்த உளுந்து சிறிய உருண்டைகள், முளைக்கட்டிய பயறு கலவை, சியா, மாம்பழ ப்யூரி, புளி பேஸ்ட், மாம்பழ துண்டுகள், நறுக்கிய புதினா சேர்த்தால் ஸ்டஃபிங்க்ஸ் நிறைவடைந்தது. சுவையான இனிப்பு பானி பூரி தயார். 


பானிபூரி பிரியரா இருப்பவர்கள் தயக்கம் இல்லாமல் ஆரோக்கியமாக பானிபூரி சாப்பிட சில டிப்ஸ்:



  • உணவுப் பொருட்களாக இருந்தாலும் கடைகளில் சாப்பிடுவது அதிக கலோரிகள் இருக்கும். இதனைத் தவிர்க்க பூரிகளை வீட்டிலேயே செய்யுங்கள்.

  • குறைந்த பட்ச எண்ணெய் உபயோகத்துடன் ஏர்-பிரையரில் பொரித்து எடுத்து கோல்கப்பா உருண்டைகளை வீட்டிலேயே தயாரிக்கவும். பூரிகளை பேக் செய்வதன் மூலம் வீட்டிலேயே எளிதாக அதனை சேமித்து வைக்கலாம்" என்று உணவியல் நிபுணர் பரிந்துரைக்கிறார்.

  • பானிபூரியில் வைக்கும் உருளைக்கிழங்கின் அளவை கணிசமாக குறைத்து அல்லது அதை நீக்கி  பானி பூரியை ஆரோக்கியமானதாக மாற்றலாம். உருளைக்கிழங்கிற்கு பதிலாக மசித்த கொண்டைக்கடலை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற ஆரோக்கியமானவற்றை பயன்படுத்தலாம். இது புரதச்சத்து நிறைந்ததாகவும், ஊட்டச்சத்துடன் இருக்கும்

  • கோல்கப்பா அல்லது பானி பூரியை குறைந்த கலோரியிலான சிறப்பான சுவையான உணவாக மாற்றலாம்.சரியான அளவில் இதனை உட்கொள்ளும்போது, ‘பர்கர்கள், பீஸ்ஸாக்கள், மஞ்சூரியன், சீஸ் கார்ன் ரோல்’ போன்ற பிற விருப்பங்களுடன் அதனை ஒப்பிட்டுப் பார்த்தால், அது நிச்சயமாக குறைந்த கலோரி கொண்ட உணவாக இருக்கும். பானி பூரியை அளவோடு சாப்பிடுங்கள்

  • பானி பூரியில் பயன்படுத்தப்படும் பானியில் ஏராளமான  மசாலாப் பொருட்கள் உள்ளன, அவை உண்மையில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நீங்கள் வீட்டில் பானி செய்தால், உடல்நலத்திற்கு உதவலாம்.

  • பானி தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் புளி உண்மையில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக்கூடிய இரும்புச்சத்துக்கான சிறந்தது என்று சொல்லப்படுகிறது.  இதுதவிர புதினா, பெருங்காயம் , பெருஞ்சீரகம் விதைகள் , சீரகப் பொடி , கருப்பு உப்பு , ஜல்ஜீரா போன்ற குடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பிட்ட பொருட்களும் உள்ளன.

  • இந்த மசாலாப் பொருட்கள் நமது செரிமானப் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் உள்ளன.

  • இருப்பினும் அடிக்கடி பானி பூரி சாப்பிட கூடாது என்று பரிந்துரைக்கிறார்கள்.