மரபுகள் மங்கிப்போய், புதிய வடிவங்களை எடுக்கும் பின் நவீனத்துவ உலகில், அதனால் மறக்கப்பட்ட பல முக்கியமான ரத்தினங்களுக்கு மீண்டும் அங்கீகாரம் அளிக்க வேண்டிய அவசியமும் உள்ளது. சில மாற்றங்கள் கண்டிப்பாக மறுக்க முடியாதவை, அவை காலத்தின் தேவையாக கூட இருக்கும். அவை பல விதங்களில் நம்மையும், நம் சமூகத்தையும் முன்னோக்கி கூட்டி செல்லலாம். அவற்றை கடைபிடிப்பது கண்டிப்பாக அவசியம் தான். ஆனால் பழைய பழக்கங்களில் சிலவற்றிலும் இன்றியமையாத நலன்கள் இருந்திருக்கும். அப்படி நம்மில் பலர் மறந்துவிட்ட பழக்கம் கைகளால் உணவை சாப்பிடும் பழக்கம். நிச்சயமாக, பளபளப்பான ஸ்பூன் மற்றும் ஃபோர்க்குகள் நம் வீட்டு டைனிங் டேபிளில் இருக்கும். ஆனால் இன்னும் பலர் தங்கள் உணவை விரல் நுனியில் தொட்டு உணர்ந்து உண்பதை அனுபவிக்கிறார்கள். இந்தியா, கிரீஸ் மற்றும் எகிப்து போன்ற பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள் தொடர்ந்து உணவை கையால் சாப்பிட்டு வருகின்றனர். இருப்பினும் பாரம்பரியத்தை தாண்டி, ஆரோக்ய நன்மைகள் அதில் இருப்பது தான் ஹைலைட். கைகளால் உண்ணுதல் கவனத்துடன் சாப்பிட உதவும். உணவை கைகளால் தொட்டு, அதன் அமைப்பை உணர்ந்து, அதன் வெப்பநிலையை கைகளால் தெரிந்து உண்பது உணவுடனான தொடர்பை ஆழமாக்கும். மெதுவாக உண்பதன் மூலம், நாம் ஒவ்வொரு வாய் உணவையும் ருசித்து சாப்பிடலாம். 


ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?


ஆயுர்வேதம் இயற்கையுடன் எவ்வாறு இணக்கமாக வாழ வேண்டும் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஆயுர்வேதத்தின் படி, உங்கள் கைகளால் சாப்பிடுவது சுகாதாரமானது மட்டுமல்ல, உங்கள் புலன்களுக்கும் செரிமானத்திற்கும் நன்மை பயக்கும் என்று தெரிகிறது. ஒவ்வொரு விரலும் விண்வெளி (கட்டை விரல்), காற்று (ஆள்காட்டி விரல்), நெருப்பு (நடுவிரல்), நீர் (மோதிர விரல்) மற்றும் பூமி (சிறு விரல்) ஆகிய ஐந்து உறுப்புகளில் ஒன்றைக் குறிக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. நாம் கைகளால் சாப்பிடும்போது, இந்த கூறுகளை செயல்படுத்தி, நம் உடலில் உள்ள ஆற்றல்களை சமநிலைப்படுத்தும் சைகை செய்கிறோம் என்கிறது. 




  1. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது


கைகளால் சாப்பிடுவது விரல்கள் மற்றும் கை தசைகளின் இயக்கத்தை உள்ளடக்கியது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் மூட்டுகளில் விறைப்பைத் தடுக்கிறது.


தொடர்புடைய செய்திகள்: CM Salem Visit: கலைஞர் சிலை, ஈரடுக்கு நகர பேருந்து நிலையம்... சேலத்தில் இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!



  1. செரிமானத்தைத் தூண்டுகிறது


கைகளால் சாப்பிடுவது, வாய் மற்றும் வயிற்றில் செரிமான நொதிகள் மற்றும் சாறுகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது, இது உணவை மிகவும் திறமையாக உடைக்க உதவதோடு, அஜீரணம், வீக்கம் மற்றும் வாயுவைத் தடுக்கிறது.




  1. அதிகமாக உண்பதைத் தடுக்கிறது


உணவின் அமைப்பை கை தெரிந்து கொள்வதால், சுவை மற்றும் நறுமணம் ஆகியவற்றை நம்மை அதிகமாக உணர செய்கிறது. இது நமது திருப்தியின் அளவை உடனடியாக எட்ட செய்கிறது. இதனால் நாம் அதிகமாக சாப்பிடுவதைத் தடுத்து ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க உதவுகிறது.



  1. இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது


கைகளால் சாப்பிடுவது உண்ணும் வேகத்தைக் குறைக்கும், இது உணவின் கிளைசெமிக் குறியீட்டைக் குறைத்து இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும். நீரிழிவு அல்லது ப்ரீடயபட்டீஸ் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.



  1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது


கைகளால் சாப்பிடுவது நமது தோல், வாய் மற்றும் குடலில் இருக்கும் சில நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உதவும். இந்த பாக்டீரியாக்கள் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.