சமீபத்திய ஆய்வின்படி, ஒரு வாரத்திற்கு இரண்டு முறை அவகோடா என்ற பட்டர் ஃப்ரூட்டை  சாப்பிடுவது இருதய சம்பந்தமாக வரும் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இந்த அவகோடா பழத்தை பட்டர் ஃப்ரூட் எனவும் தமிழில் வெண்ணெய் பழம் எனவும் அழைக்கின்றனர்.


இந்த ஆய்வு 'ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அவகோடா பழங்களில் உள்ள  நார்ச்சத்து மற்றும் நிறைவுறா மோனோசாச்சுரேட்டட் வகை நல்ல கொழுப்புகள்  உள்ளது. பீட்டா சிட்டோஸ்டெரால் இருப்பதினால் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு இது ஆகச்சிறந்த ஒரு தீர்வாக உள்ளது.கரோனரி இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற இருதயத்துடன் சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்ப்பதற்கு இந்த பழம் உதவுகிறது. நிறைவுறா கொழுப்புகள் உணவின் தரத்தை மேம்படுத்தும் அப்படிப்பட்ட நிறைவுறா கொழுப்பு நிறைந்த உணவாக அவகோடா பழம் விளங்குகிறது. 


அமெரிக்காவின் தரவுகளின்படி, கடந்த 30 ஆண்டுகளாக, ஆராய்ச்சியாளர்கள் 68,780 க்கும் மேற்பட்ட பெண்களைப் பின்தொடர்ந்தனர். இவர்களின் வயது வயது 30 முதல் 55 வரை ஆகும். இதைப் போலவே 41,700 க்கும் மேற்பட்ட ஆண்களையும் பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டனர் இவர்களின் வயது 40 முதல் 75 வரை ஆகும்.இந்த ஆய்வில் பங்கேற்பாளர்கள் அனைவரும் புற்றுநோய், கரோனரி இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் இல்லாதவர்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலான இந்த ஆய்வின் போது  இதில் பங்கு கொண்டவர்களின் உணவை ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக கண்காணிப்பாளர் அதைக் கொண்டு ஒரு மதிப்பீட்டையும் பெற்றனர்.


ஆய்வின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட  கேள்விகளைக் கொண்டும் பின்னர் ஒவ்வொரு நான்கு வருடத்திற்கும் ஒரு முறை அவர்கள் உணவுப் பழக்கத்தில் இருக்கும் மாற்றங்களை கணக்கில் கொண்டும் பின்வருமாறு முடிவுகளை வெளியிட்டனர் 


சாப்பிடும் அளவு மற்றும் கணக்கிடல் முறையில்  ஒரு வாரத்திற்கு இருமுறை அவர்கள் அவகோடா பழம் சாப்பிட்டதனால் இருதய நோய்க்கான ஆபத்து 21 சதவீதமாக குறைந்து இருந்ததை கண்டனர். இதைப் போலவே பக்கவாதத்திற்காக காரணங்கள் இவர்களிடம் குறிப்பிடும்படியாக இல்லை என்பதையும்  ஆய்வில் கண்டு கொண்டனர்.


மேலும் இந்த பழமானது புற்று நோய்க்கு எதிராகவும் மனச்சோர்வுக்கு மற்றும் செரிமானத்திற்கும் மிகப்பெரிய   பங்களிப்பாற்றுகிறது,என்பதையும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது பெரி வகை பழமாகும் மித வெப்ப மண்டலத்தில் வளரும் தன்மையுடைய இந்த மரத்தின் பழமானது இன்னும் நிறைய சத்துக்களை தன்னிடத்தே கொண்டுள்ளது. வைட்டமின்கள் சி, ஈ, கே மற்றும் பி6 மற்றும் ரிபோஃப்ளேவின், நியாசின், ஃபோலேட் , பாந்தோத்தேனிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் மூலமாகும் . அவை லுடீன், பீட்டா கரோட்டின் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களையும் வழங்குகின்றன.இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.


ஃபோலேட் ஹோமோசைஸ்டீன மூளைக்கு ஊட்டச்சத்துக்களின் விநியோகத்தை பாதிக்கும். அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அறிவாற்றல் செயலிழப்பு மற்றும் மனச்சோர்வு  ஆகியவற்றை உண்டு பண்ணும். இந்த அவகோடா பழமானது மனநிலை, தூக்கம் மற்றும் பசியின்மை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.ஃபோலேட் ஹோமோசைஸ்டீனை உருவாக்குவதைத் தடுக்க உதவுகிறது.


இந்த அவகோடா பழத்தில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளதால் மலச்சிக்கலை தவிர்த்து செரிமானத்திற்கு உதவுகிறது இவ்வாறு சரியான செரிமானம் இருக்கும் வயிற்றுப் பகுதியில் பெருங்குடல் புற்றுநோய் அபாயம் முற்றிலும் நீங்குகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை எதிர்ப்பதிலும் இந்த பழம் மற்றும் பழத்தின் கொட்டையில் இருந்து பெறப்படும் எண்ணெய் ஆனது மிகவும் உதவுகிறது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் அகலாக்டியே மற்றும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பழத்தின் விதை சாறுகள் உடலை பாதுகாக்கின்றன.


இவ்வாறாக சத்துக்கள் நிறைந்த அவகோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட் பழத்தை வாரம் இருமுறையேனும் வாங்கி உண்ணுங்கள்.