பொதுவாக இந்தியாவானது உணவு கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. அதுவும் நமது நாட்டில் உள்ள சாலையோர சிற்றுண்டி உணவுகளுக்கு நாடு முழுவதும் பரந்த அளவில் சிறப்பான வரவேற்பு உள்ளது. நமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நமது நாட்டில் உள்ள சாலையோர உணவுகளில் உள்ள சிறப்பான சில சிற்றுண்டி உணவுகளை உண்பதற்காகவும் அதிக அளவு வருகை தருகின்றன.


அவர்கள் நமது நாட்டில் உண்ணும் உணவுகளை பற்றி அவர்களது நாட்டிலும் பெருமையாக பேசுவதை நாம் கண்டிருக்கிறோம் .நமது நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வகையான உணவு கலாச்சாரம் ஆனது உள்ளது. இப்பொழுது நாம் பெங்களூரில் உள்ள சாலையோர கடைகளில் சிறப்பு பெற்ற சில உணவுகள் மற்றும் அதன் வகைகளை விரிவாக பார்ப்போம்.


பொதுவாக பெங்களூர் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது தொழில்முனைவோர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இரவு கேளிக்கை விருந்துகள்  தான் நமது நினைவிற்க்கு வரும். ஆனால் பெங்களூரில் ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு உணவிற்கு சிறப்பு பெயர் பெற்றது.இந்த நகரம் உயரமான கட்டிடங்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களால் பரபரப்பாக இருக்கும் அதே வேளையில் பெங்களூரில் உள்ள உணவுகளின் சுவையானது நம்மை பெரிதும் கவரும்.


பெங்களூருவில் நாம்  எந்த தெருவில் பார்த்தாலும் சட்டினிகள் நிறைந்த தோசை மற்றும் இட்லி என நாக்கை அடிமையாக்கும் அளவிற்கு சுவை நிறைந்த  விதவிதமான உணவுகளை நாம் உண்டு மகிழலாம். ஆனால் நாம் இங்கு வந்தால்  தவறாமல் சாப்பிடக்கூடிய உணவாக ஒரு ஐந்து வகையான உணவுகள் உள்ளது. அது என்ன என்பதை நாம் இப்பொழுது விரிவாக பார்ப்போம்:
இந்த ஐந்து வகையான உணவுகளும் நாம் பெங்களூரில் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டிய உணவுகளாகும்:


1.தில்குஷ் மிட்டாய்:
பொதுவாக எல்லோருக்கும் இனிப்பானது பிடிக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. எனவே குறைவான இனிப்புகளை சாப்பிட விரும்புவர்களுக்கு இந்த தில்குஷ் மிட்டாய் ஆனது சிறந்த ஒரு உணவாகும்.இதில் தேங்காய் மற்றும் மாவாவுடன் கலந்த மிட்டாய்களின் துண்டுகள் ஒரு ரொட்டியில் நிரப்பப்பட்டு சரியான முறையில்  இவைகள் சமைக்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது. இதன் சுவையானது இனிமையாகவும், மேலும் மேலும் உண்பதற்கு நம்மை தூண்டுபவைகளாகவும் உள்ளது. இதனை நாம் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டும்.


2.தட்டு இட்லி:
இந்த தட்டு இட்லிக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவிற்கு இது மிகவும் பிரபலமானது. இந்த இட்லியில் உள்ள பலவிதமான சட்னிகள் இந்த இட்லியின் சுவையை மேலும் அதிகரிக்கிறது .நாம் நமது வீட்டில் சாதாரணமாக இட்லி சுடும் மாவிலேயே இந்த  இட்லியும்   சுடப்படுகிறது. ஆனாலும் இந்த இட்லியின் வடிவம் மற்றும் இதன் அளவானது நாம் வீட்டில் சுடும் இட்லியில் இருந்து மாறுபடும். இந்த தட்டு இட்லியை பொடி மற்றும் நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவையானது இரட்டிப்பாகும்.


3. மங்களூர் பன்
இத்தகைய மங்களூர் பன், ஆனது உடுப்பி பகுதியின் சிறப்பு உணவாகும். இது வாழைப்பழத்தால் செய்யப்பட்ட இனிப்பு, மற்றும் மென்மையான  பஞ்சுபோன்ற பூரி ஆகும். இந்த மங்களூர் வாழைப்பழ ரொட்டிகளை நாம் மிக  எளிமையாகத் தயாரிக்கலாம். இந்த மங்களூர் பன்னுடன் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அதன் சுவை நன்றாக இருக்கும்.


4. பென்னே தோசை
இந்த பென்னே தோசையாது பட்டர் டோஸ்,மற்றும்  தாவாங்கேரே பென்னே தோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது கர்நாடகாவின் தாவணகெரே நகரில் உருவான தோசை வகையாகும்.இதன் காரணமாக இதற்கு இந்த பெயரானது வந்தது. இதில் வழமையாக கலக்கப்படும்  அரிசி  உளுந்து  வெந்தயம் இவற்றுடன் அவளும் சேர்க்கப்படுகிறது.இதனை  ஆங்கிலத்தில், "பென்னே தோசா" என்ற சொற்றொடர், "வெண்ணெய் டோஸ்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பென்னே தோசையின்  சுவையை நாம் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும்.


5. பில்டர் காபி:
தென்னிந்தியாவை பொறுத்தவரை பல வகையான இன்ஸ்டன்ட் காபிகள் மற்றும் பில்டர் காபிகள் கிடைக்கும். ஆனால் பெங்களூரில் உள்ள தெரு பாணி ஃபில்டர் காபியின் சுவையுடன் எந்த காஃபியையும் நம்மால்  ஒப்பிட முடியாது என்பது உண்மை. இதனை ஒரு முறை குடித்து விட்டால் நாம் எப்பொழுது பெங்களூருவில் இந்த காபியை நம்மால் தவிர்க்க முடியாது.


மேலே கூறியுள்ள ஐந்து உணவுகளையும் ,நாம் எப்பொழுது  பெங்களூர் சென்றாலும்  முயற்சி செய்து இந்த சுவையை அனுபவித்து மகிழலாம்.