தேசிய ஊட்டச்சத்து வாரத்தில் நமது உடலுக்கு தேவையான சமச்சீர் உணவுகளை சரியாக எடுத்துக் கொள்வதோடு, சுவைகளை கொண்டாடும்  உலகத்தை சமைப்போம்.


செப்டம்பர் 1 தேதியிலிருந்து 7 தேதி வரையிலும் தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இப்படியான நிகழ்வுகள் கடைபிடிக்கப்படும் பொழுது, ஒரு கருப்பொருளைக் கொண்டு இந்த ஊட்டச்சத்து வாரமானது கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இந்த வருடத்திற்கு சுவைகளை கொண்டாடும் உலகத்தை சமைப்போம் என்பது கருப்பொருளாக இருக்கிறது. இதன் மூலம் அரசனது மக்களிடம் ஊட்டச்சத்தின் அவசியத்தையும், ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதை பற்றியும் விழிப்புணர்வை கொண்டு சேர்க்க இத்தகைய நிகழ்வுகளை பின்பற்றுகிறார்கள்.


தேசிய ஊட்டச்சத்து வாரம் 2022 ன் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வோம். தேசிய ஊட்டச்சத்து வாரம் 1975 ஆம் ஆண்டில் அமெரிக்க உணவுமுறை சங்கத்தின் (ADA) உறுப்பினர்களால் நிறுவப்பட்டது, இப்போது அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தியா 1982 ஆம் ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து வாரத்தைக் கொண்டாடத் தொடங்கியது. இதைப்பற்றி சமூக வலைதளங்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் செய்திகள் ஓடும் பொழுது இதை வெறும் செய்தியாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளாமல்,நமது அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் சமச்சீர் உணவை எவ்வாறு கொண்டு வருவது என்பதை பற்றி நாம் அவசியம் சிந்திக்க வேண்டும்.


பைந்தமிழர் வாழ்க்கை முறையில் உணவே மருந்து என்ற முதுமொழி இடம் பெற்றிருக்கும்.ஆகையால் அனைத்து சத்துக்களும் நிரம்பிய சமச்சீர் உணவை உட்கொள்வதன் மூலம் 99 சதவீத நோய்களிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.


உடலுக்கு மிக அவசியமான புரதம் ஒரு மனிதனுக்கு சராசரியாக கலோரி தேவையில் 10 முதல் 35 சதவீதம் ஆனது புரதத்தின் மூலம் கிடைக்கப்பட வேண்டும். சராசரியாக 60 கிலோ எடையுள்ள இந்திய ஆணுக்கு 60 கிராம் புரதமும் 55 கிலோ எடையுள்ள இந்திய பெண்ணிற்கு 55 கிராம் புரதமும் தினமும் கண்டிப்பாக தேவை. ஆகவே இந்த புரதத்தை இறைச்சி பால் முட்டை தயிர் சிறுதானியங்கள் முளைகட்டிய பயிறு வகைகள் கீரைகள் காய்கறிகள் ஆகியவற்றின் மூலம் எடுத்துக் கொள்ளலாம். கீரைகளில் புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளில் கீரைகளும் அடக்கம். ஒரு கப் கீரை உங்கள் டயட்டில் இடம் பெறுவது உங்கள் தினசரி வைட்டமின் ஏ தேவைகளில் 56 சதவீதத்தையும், உங்கள் முழு தினசரி வைட்டமின் கே தேவையையும் பூர்த்தி செய்கிறது.


இதே போலவே காய்கறிகளில் கேரட் ,அவரைக்காய், கத்தரிக்காய்,வெண்டைக்காய், புடலங்காய்,பூசணிக்காய், பீர்க்கங்காய்,பீட்ரூட்,வைட்டமின் சி , கே மற்றும் ஏ உள்ளிட்டதையும் ஆக்சிஜன் நெற்றிகள் மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் காணப்படுகிறது. மேலும் மாங்கனீஸ், வைட்டமின் பி 6, வைட்டமின் சி மற்றும் செலினியம் நிறைந்து காணப்படுகிறது.


இதைப் போலவே சிறுதானியங்களில் கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்றவை மிகக் குறுகிய காலத்தில், சாதாரண மண்ணில், வறட்சி நேரத்திலும் வளரக்கூடியவை பண்பை கொண்டிருப்பதோடு மட்டுமின்றி  புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. கொண்டைக்கடலை,வேர்க்கடலை , கருப்பு கொண்டைக்கடலை, பச்சை பயறு, துவரம் பருப்பு, அவரை விதைகள்,பூசணி விதைகள்,  பீன்ஸ் விதைகள்,எனப்படும் இத்தகைய பயிறு வகைகளில்  தாது உப்புக்களும் அமினோ அமிலங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இதையெல்லாம் கணித்து என்னவோ இந்திய உணவு வகைகளில் குறிப்பாக தென்னிந்திய உணவு வகைகளில் காலையில் சிறுதானியங்களைக் கொண்ட கேழ்வரகு மற்றும் கம்பை கொண்ட கலி அல்லது கூழ் போன்ற உணவு வகைகள் இன்றளவும் தமிழக இல்லங்களில் சிறப்பிக்கின்றன


அப்படி இல்லையெனில் பிரதம் நிறைந்த உளுந்து சேர்த்த இட்டலி அல்லது பாசிப்பயறு சேர்த்த பொங்கல் போன்றவைகளும் மாற்றாக நம் உணவில் உள்ளன. மதிய வேலைகளில் நம் வீடுகளில் ஒரு கீரை ஒரு காய்கறியிலான கூட்டு கடலை அல்லது துவரை பருப்பை கொண்ட சாம்பார் என அரிசியின் கார்போ ஐக்கியத்துடன் சேர்ந்து நமக்கு கிடைக்கும் விதத்தில் நமது பழந்தமிழரின் உணவு பழக்கமானது இருந்திருக்கிறது. ஆகையால் இத்தகைய உணவு எல்லாம் விடுபட்டுப் போனவர்கள மேற் சொன்ன உணவுப் பொருட்களை எல்லாம் தினம் தோறும் நம் உணவில் சேர்த்துக் கொண்டு நம்மையும் நம் குடும்பத்தையும் ஊட்டச்சத்து குறைபாடினால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்து சிறப்பான வாழ்க்கையை வாழ்வோம்.