உருளைக்கிழங்கு இல்லாத சமையலைப் பார்ப்பதே அரிது. ஆனால் குறைந்த கார்ப் உணவுகளை விரும்புவதால் மக்கள் பெரும்பாலும் மிகவும் பிடித்த இந்தக் கிழங்குகளை உட்கொள்வதைத் தவிர்க்கிறார்கள்.வயதனாவர்கள் கிழங்கு வகைகள் ஏற்படுத்தும் வாயுப் பிரச்னையின் காரணமாக இதைத் தவிர்க்கிறார்கள்.
ஆனால் அண்மையில் வெளியான ஒரு ஆய்வின்படி உருளைக்கிழங்கு அப்படியொன்றும் ஆபத்தான காய்கறி இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் இதழின் ஆராய்ச்சியாளர்கள், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கப் அளவு உருளைக்கிழங்கையோ அல்லது அதன் குடும்ப வகையான சர்க்கரைக்கிழங்கைச் சாப்பிடுவதோ தீங்கு விளைவிப்பதில்லை என்பதை வெளிப்படுத்தியது. மேலும் உருளைக்கிழங்கு வறுக்கப்பட்டதா இல்லையா என்பது அதை உட்கொள்வதில் முக்கியமல்ல எனக் குறிப்பிட்டுள்ளது
30 வயதுக்கு மேற்பட்ட 2,523 பேரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் டிஸ்லிபிடெமியா போன்ற உடல்நலக் குறைபாடுகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. உருளைக்கிழங்கை உட்கொண்ட நபர்கள் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வாளர்கள் ரெட் மீட் எனப்படும் மட்டன் மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகளுக்கு மாற்றாக இந்த உண்ணக்கூடிய கிழங்குகளை வைத்திருந்தனர். உருளைக்கிழங்கை சாப்பிட்டவர்களை கவனித்ததில் கூடுதலாக, அவர்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்தனர். இதன் விளைவாக, அவர்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் 24 சதவிகிதம் குறைவாகவும், உயர்த்தப்பட்ட ட்ரைகிளிசரைடுகள் 26 சதவிகிதம் குறைவாகவும் இருந்தன.
இந்த ஆண்டு செப்டம்பரில் ஆராய்ச்சி வெளியிடப்பட்டாலும், ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகாலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் 1971ம் ஆண்டு முதல் பங்கேற்பாளர்களில் 70 சதவிகிதம் பேரின் பழைய தரவுகளை சேகரித்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த ஆய்வைத் தொடர்ந்தனர்.
ஆய்வின்படி, பங்கேற்பாளர்கள் சுமார் 36 சதவிகிதம் பேர் பேக்கிங் செய்த உருளைக்கிழங்கை சாப்பிட்டனர், 20 சதவிகிதம் பேர் வறுத்த உருளைக்கிழங்கை சாப்பிட்டனர், 14 சதவிகிதம் பேர் மசித்த உருளைக்கிழங்கை உட்கொண்டனர் மற்றும் 9 சதவிகிதம் பேர் அவர்கள் அதை வேகவைத்து சாப்பிட்டார்கள்.
இதைப் படித்ததும் உங்கள் உணவில் உருளைக்கிழங்கை மீண்டும் சேர்க்கத் தயாரானால் அந்த உணவைப் பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய சில நன்மைகள் இங்கே உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது உருளைக்கிழங்கு என்பது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர்ந்த ட்ரைகிளிசரைடுகளின் அபாயத்தை அதிகரிக்காத பதப்படுத்தப்படாத உணவு என்கின்றனர் அவர்கள். மேலும், உருளைக்கிழங்கு ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகும். மேலும் அவை செல் அளவில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கவும் உதவுகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.