ஆரம்பகாலங்களில் பொதுவாக எல்லோரும் இயற்கையான எண்ணெய் மற்றும் இயற்கையான கற்றாழை, செம்பருத்தி பூ இலை வெந்தயம் முட்டை வெள்ளை கரு போன்ற சோப் வகைகளைத்  தான் தலைமுடிக்கு பயன்படுத்த வந்தார்கள். அப்போது வீட்டில் உள்ளவர்களுக்கு  இடுப்புக்கு கீழ்தான் முடி நீண்டு வளர்ந்திருக்கும். ஆனால் காலப்போக்கில் இவை எல்லாம் மாறி தற்போது முடி வளர்ச்சி இன்மை ,  சேதமடைதல், முடி உதிர்தல் , தலையில் பிரச்சனை என பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகிறோம்.


ஒழுங்கான பராமரிப்பு இன்மை, உணவு முறை பழக்கவழக்கங்கள், வேலைப்பளு என பலதும் இந்த முடி வளர்ச்சியில் தாக்கத்தை செலுத்துகின்றன. தற்போது அதிக அளவிலானோர் அழகு நிலையங்களுக்கு சென்று ரசாயன முறையிலான முடி பராமரிப்பை மேற்கொள்கின்றனர். இது காலப்போக்கில் முடி உதிர்தல், சேதமடைதல் என முடி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


இயற்கையான முறையிலேயே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் நீண்ட கூந்தலை பெறலாம் எனவும், கூந்தலை ஆரோக்கியத்தை பேண முடியும் எனவும் கூறப்படுகிறது.


தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்ற வகையிலான அழகு பராமரிப்பு எனக் கூறி, இரசாயன சிகிச்சைகள் மற்றும் ஸ்டைலிங் இயந்திரங்களின் அதிகப்படியான பயன்பாடு, அதிகப்படியான வெப்பம் என முடி நார்கள்  பலவீனமடைகிறது. 


அதுமட்டுமில்லாமல் சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகப்படியான சூரிய ஒளி மற்றும்   ஒழுங்கான பராமரிப்பு இன்மை போன்ற பிற காரணிகளும்  முடி சேதமடைதல் மற்றும் உதிர்வை ஏற்படுத்துகின்றன.


 இயற்கையாக வளரும் ஒரு முடியை செயற்கை காரணங்களால் சிதைத்து விட்டு, மீண்டும் அதனை மீட்டெடுப்பது என்பது ஒரு கடினமான செயலாகும். மீண்டும் முடியை நாம் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க இயற்கை முறையிலான வீட்டு மருத்துவ முறைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறோம். ஆகவே காலம் காலமாக பின்பற்றி வந்த கூந்தல் வளர்ச்சிக்கான நடைமுறைகளை பின்பற்றி வந்தால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.


முடிவு சேதமடைதல், முடி உதிர்தல், அடர்த்தி குறைதல் என்பது சிலருக்கு மன அழுத்தத்தையும், தன்னம்பிக்கை குறைவையும் ஏற்படுத்திவிடுகிறது. ஆகவே இதற்கு ஒழுங்கு முறையான பராமரிப்பு, முறையான உணவு பழக்க வழக்கங்கள் என்பவற்றை பின்பற்றும் போது முடியை நாம் அழகாக பராமரிக்கலாம்.



கூந்தல் வறட்சியை சரி செய்யும் தயிர்:


வறண்ட கூந்தலை சரி செய்ய தயிர் மூலம் சிகிச்சை அளிப்பதனால் சரி செய்ய முடியும் என கூறப்படுகிறது. தயிரில் அதிகளவான ஈரப்பதம் இருப்பதால் அது முடி நார்களை  ஈர பதத்துடன் வைத்திருக்கும் என நம்பப்படுகிறது. யோகர்ட்டில்   உள்ள லாக்டிக் அமிலம்
 முடியிலிருந்து ஈரப்பத இழப்பை சரி செய்கிறது. கூந்தல் முழுவதும் தயிர் தடவுவது குறிப்பாக நரைத்த கூந்தலுக்கு நல்லது. ஏனெனில் இது கூந்தலின் அடி நார்கள் வரை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் தக்கவைக்க உதவுகிறது.  தயிரை முடிக்கு தடவி குறைந்தது 20 நிமிடங்களாவது நன்கு ஊறும் வரை விட்டு வைக்க வேண்டும். பின்னர்  நல்ல பளபளப்பை பெற, ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு தலைமுடியை குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.


முடி சேதமடைவதை தடுக்கும் தேங்காய் எண்ணெய்:


ஆரம்ப காலங்களில் வீடுகளில் தலைக்கு அதிகளவாக வீட்டில் காய்க்கப்பட்ட தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வந்தார்கள் .அது  முடி  நன்கு  நீளமாகவும் , கருகருப்பாகவும் வளர்வதற்கு காரணமாக இருந்தது. பொதுவாக வீடுகளில் தேங்காய் எண்ணெயை தலைக்கு பூசி ஒரு ஓரிரு மணி நேரம் மட்டுமே வைத்திருந்து தலைக்கு குளிப்பார்கள். அது முறையான பராமரிப்பை தருகிறதா இல்லையா என்பதும் ஒரு கேள்வி. ஆனால் ஆரம்ப காலங்களில் குறைந்தது தலைக்கு எண்ணெய் வைத்தால் மூன்று நாட்கள் வரை அது தலையிலேயே அப்படியே ஊறிக்கிடக்கும் .அதன் பின்னர் தான் தலைக்கு ஷாம்பூ போட்டு நன்கு கழுவி சுத்தம் செய்வார்கள். ஆகவே  தேங்காய் எண்ணெயானது கூந்தலில் உள்ள நார்களில் நன்கு ஊறும் வரை ஓரிரண்டு நாட்களாவது விட்டு வைக்க வேண்டும். தலைமுடி நன்கு நீளமாகவும் கருகருப்பாகவும் வளரும். இது ஆரம்ப காலங்களில் முன்னோர்கள் பின்பற்றி வந்த முறையாகும் . அதேபோல் முடி சேதம் அடையாமல் பளபளப்புடன், பொலிவாக காட்சி தரும்.


 முட்டை:


தலைமுடிக்கு முட்டையை பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான கூந்தலை நாம் பெறலாம். முட்டையில் அதிகளவான புரதச்சத்து நிறைந்திருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு புரதச்சத்து என்பது இன்றியமையாதது. ஆகவே தான் முடி சேதமடையாமல்  பளபளப்புடன் இருப்பதற்கு முட்டையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையில் உள்ள அமினோ அமிலங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்து ஊட்டமளிக்க கூடியவை.


காற்று மாசு மற்றும் சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட தலை முடியை இது சரி செய்கிறது. உலர்ந்த கூந்தலை ஈரப்படுத்தவும், வலுப்படுத்தவும் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு பயன்படுகிறது. மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவை நன்கு கலந்து தலை முடி முழுவதும் நன்கு பூசி  சுமார் அரை மணி நேரம் வரை அப்படியே விட்டு வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முடியை கழுவும். இந்த முட்டை சிகிச்சையை வாரத்திற்கு ஒரு முறை தலைமுடிக்கு செய்வது சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.