மூவர்ணத்தில் செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் நிறையவே உள்ளது. அவற்றில் சில உணவு வகைகளின் ரெசிப்பிக்களையும் அவற்றை செய்யும் முறை குறித்தும் பார்க்கலாம் வாங்க.
மூவர்ணத்தில் புலாவ்:
நம் நாட்டில், தாளித்த உணவுகளுக்கான பிரியர்கள் பலர் உண்டு. தாளித்த உணவுகளின் பட்டியலில் முதலில் வருவது, புலாவ் எனப்படும் ஒருவகை சாப்பாடு.
புதினா புலாவ்-புதினா கொத்தமல்லியை வைத்து புலாவ் செய்தால் அந்த சாதம், பச்சை நிறத்தில் காட்சியளிக்கும்.
வெள்ளை நிறத்திற்கு தேங்காய் புலாவ்-நம்மில் பலருக்கு தேங்காய் பால் எடுத்து புலாவ் செய்ய தெரியும். மூவர்ண கொடியின் வெள்ளை நிறத்திற்கு தேங்காய் புலாவை எடுத்துக் கொள்ளலாம்.
காவி நிறத்திற்கு வெஜ் பிரியாணி-நம்ம ஊரில் வெஜ் பிரியாணியை பிரிஞ்சி என்று சொல்வது வழக்கம். மூவர்ண கொடியில் உள்ள மூன்றாவது நிறமான காவி நிறத்திற்கு ஏற்றார் போல வெஜ் பிரியாணியில் சிறிது கேசரி பவுடரை அதிகமாக தூவலாம்.
மூவர்ண டோஸ்டி:
ஹெல்த்தியான டோஸ்டியை மூவர்ணத்தில் சமைத்து, சுவைத்து மகிழலாம்.
காவி நிறத்திற்கு, பன்னீர் ஷெஸ்வான்-ஸ்வீட் கார்ன், குடைமிளகாய், பன்னீர், ப்ளாக் பெப்பர், உப்பு, செஸ்வான் சாஸ் ஆகியவற்றை வைத்து காவி நிறத்திற்காக பன்னீர் ஸெஷ்வான் ஃப்ளேவரை உருவாக்கலாம்.
வெள்ளை நிறத்திற்கு, சீஸ் சில்லி-துருவிய சீஸ், வென்னை, பூண்டு ஆகியவற்றைக் கொண்டு வெள்ளை நிறத்திற்கான ஃப்ளேவரை உருவாக்கலாம்.
பச்சை நிறத்திற்கு சட்பட்டா புதினா-ஆளு மிக்ஸ்-மூவர்ணத்தின் வெள்ளை நிறத்திற்கு, புதினா சட்னி, வேகவைக்கப்பட்ட உருளைக் கிழங்கு, வெங்கயாம். கொத்தமல்லி ஆகியவற்றைக் கொண்டு பச்சை நிறத்தையும் புதினா ஃப்ளேவரையும் உருவாக்கலாம்.
இந்த மூன்று ஃப்ளேவர்களையும் ஒரு ஒரு நிறமாக ஒரு பிரெட் துண்டில் வைத்து அதை டோஸ்ட் செய்து, டேஸ்ட் செய்யலாம்.
இதற்கான முழு சமையல் குறிப்பினைத் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்
மூவர்ணத்தில் சுவையான இட்லி:
நம்ம வீட்டில் தினமும் டின்னர் அல்லது காலை உணவிற்கு உபயோகப்படுத்தப்படும் இட்லியை, மூவர்ணத்திலும் செய்யலாம்.
காவி நிறத்திற்கு கேரட்-உப்பு, கேரட், சிறிதளவு லெமன் சாறு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு இட்லி மாவை எடுத்து இதனுடன் மிக்ஸ் செய்யுங்கள்.
வெள்ளை நிறத்திற்கு இட்லி மாவு-வழக்காமான இட்லி மாவையே இதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
பச்சை நிறத்திற்கு பாலக்கீரை-மூவர்ணத்தின் பச்சை நிறத்திற்கு, பாலக்கீரையை அறைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
முதலில் கேரட் அரைவையை இட்லி தட்டில் ஊற்றி வேகவைக்கவும், 5 நிமிடம் கழித்து இட்லி மாவை ஊற்றி வேகவிடுங்கள், 5 நிமிடம் கழித்து காவி நிற மாவை ஊற்றி வேகவிடுங்கள். முழுமையாக வெந்த பிறகு வெளியில் எடுத்தால், மூவர்ண இட்லி தயார்.
மூவர்ணத்தில் சிக்கன் கெபாப்:
நீங்கள் அசைவப் பிரியராக இருந்தால், இந்த டிஷை சுவைத்து மகிழுங்கள்.
கறித்துண்டுகள்-எலும்பில்லாத சிக்கனை எடுத்து துண்டு துண்டாக வெட்டி, உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஊர வைக்கவும்.
பச்சை நிறத்திற்கு ஹரியாலி கெபாப்-கொத்தமல்லி, புதினா, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சம் தயிர் கரம் மசாலா. எண்ணெய், ஆகியவற்றைப் போட்டு மிக்ஸ் செய்யுங்கள். பிறகு அதனை சிக்கனுடன் சேர்த்துக 1 மணி நேரத்திற்கு ஊரவைக்கவும்.
காவி நிறத்திற்கு தந்தூரி கெபாப்-தயிர், கரம் மசாலா, சீரகப்பொடி, கொத்தமல்லித்தூள், உப்பு, சிகப்பு மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய், மஞ்சள் தூள், சாட் மசாலா, கேசரி பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை போட்டு நன்று கலக்கவும். இதனுடன் சிக்கனை சேர்த்து ஒரு மணி நேரம் ஊரவைக்கவும்.
வெள்ளை நிறத்திற்கு மலாய் கெபாப்-ஃப்ரெஷ் க்ரீம், தயிர், வெண்ணெய், உப்பு, மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை நன்கு மிக்ஸ் செய்து பிறகு சிக்கன் துண்டுகளை இதில் ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
கெப்பாப் செய்வதற்கான குச்சியில்(skewers)மூவர்ணத்தில் செய்யப்பட்ட இந்த சிக்கன் துண்டுகளை சொருகி, மைக்ரோ வேவ் அவனில் வைத்து 40 நிமிடத்திற்கு வேகவைத்து எடுத்தால், மூவர்ண கெபாப்கள் ரெடி.
மூவர்ணத்தில் சாண்ட்விச்:
முதலில் ப்ரெட் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதில் உள்ள நான்கு முனைகளை வெட்டிக்கொள்ளுங்கள்.
பச்சை நிறம்-முதல் ப்ரெட் துண்டில் க்ரீன் சட்னியை(புதினா அல்லது பசலைக் கீரையைக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்னி) தடவுங்கள். அதன் மேல் லீட்டஸ் எனப்படும் கீரையை வைக்கவும். அதற்கு மேல், சீஸ் ஷீட்டை வைத்து மேலே மிளகுத் தூளை தூவுங்கள்.
காவி நிறம்-சீஸ் ஷீட்டின் மேல் இன்னொரு ப்ரெட் துண்டை வைத்து அதற்கு மேல் மையோனீசை தடவி, கேரட் துருவல்களை தூவவும். இதற்கு மேல் சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவுங்கள்.
வெள்ளை நிறம்- கேரட் துருவல்களின் மேல் இன்னொரு ப்ரெட்டை வைத்தால் வெள்ளை நிறம் ரெடி. இப்போது இந்த சாண்ட் விச்சை இரண்டாக வெட்டி ருசிக்கலாம்.