சீஸ் யாருக்குத்தான் பிடிக்காது?! பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ் பல்வேறு வடிவங்களில் பல்வேறு பதங்களில் நமக்குக் கிடைக்கப்பெறுகிறது. எதனையும் சுவையானதாக மாற்றும் பண்பு அதற்கு உண்டு. அதனை உணவுக்கு டாப்பிங்காகவோ அல்லது உணவின் பிரதான மூலமாகவோ பயன்படுத்தலாம். செடார் சீஸ், மோசரெல்லா, பார்மெஸான், ரிக்கோட்டா என பலவகைகளில் நமக்கு சீஸ் கிடைக்கப்பெறுகிறது.
இருப்பினும் சீஸ் அதிக கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவாகக் காணப்படுகிறது, அதாவது அதை அதிகமாக உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதே சமயம் இதில் பல அதிசய குணநலன்களும் உள்ளன. இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு கால்சியம் மற்றும் புரதத்தால் நிரம்பியுள்ளது
1. சீஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: புரோபயாடிக் பாக்டீரியாக்களுக்கு கேரியராக செயல்படுவதன் மூலம் சீஸ் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஃபெட்டா மற்றும் மொஸரெல்லா போன்ற சில வகையான சீஸ்களில் நல்ல அளவு புரோபயாடிக்குகள் உள்ளன மற்றும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
2. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது சீஸில் அதிக கொழுப்புச் சத்து இருந்தாலும், அதை அளவோடு சாப்பிடுவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சீஸ் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இருப்பினும், குறைந்த கொழுப்புள்ள சீஸைத் தேர்ந்தெடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது: சீஸ் கால்சியத்தின் வளமான மூலமாகும் அதனால் நமது எலும்பு ஆரோக்கியம் வலுவடைகிறது. அதுமட்டுமின்றி, சீஸில் வைட்டமின் பி நிறைந்துள்ளதால், உடல் கால்சியத்தை எளிதில் உறிஞ்சிவிடும். வளரும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்கள் உணவில் ஒரு குறிப்பிட்ட அளவு சீஸ் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
4. ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது: சீஸ் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்கிற நம்பிக்கைக்கு மாறாக அதனை நீங்கள் சரியாக சாப்பிட்டால் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும். இது எடையைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கை கொழுப்புகளின் நல்ல மூலமாகும். மேலும் சீஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.
5. சீஸ் இதயத்திற்கு நல்லது: சீஸ் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,இருப்பினும் அதில் உள்ள சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது இயற்கையான கொழுப்புகளின் வளமான மூலமாகும்.இதனால் அது உங்கள் இதய அமைப்பை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும்.