தேவையான பொருட்கள்


1/2 லிட்டர் - பால் 
3/4 கப் -சர்க்கரை
3/4 கப்- தண்ணீர் 
4- ஐஸ் கட்டிகள்
4- பிஸ்தா
1 1/2 ஸ்பூன் - லெமன் ஜூஸ்
1 சிட்டிகை -ஏலக்காய் பொடி


செய்முறை


ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதிக்கும் தருவாயில், பாலுடன் சிறிது லெமன் ஜுஸ் சேர்க்க வேண்டும். இப்போது பால் திரிவதை பார்க்க முடியும். திரியும் பாலில் உள்ள தண்ணீர் வற்றும் வரை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் அடுப்பை ஆப் செய்து விட்டு, ஐஸ் கட்டிகளை பாலில் சேர்க்க வேண்டும்.


ஐஸ் கட்டிகள் உருகிய பின்னர், மஸ்லின் துணியில் பாலை ஊற்றி நீர் இல்லாமல் வடிகட்ட வேண்டும். இப்போது மஸ்லின் துணியில் இருக்கும் பாலை லெமன் வாசனை போகும் வரை  தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ள வேண்டும்.


பின் அதை ஒரு துணியில் சுற்றh  நன்றாக பிழிந்து அரை மணி நேரம் தனியாக வைத்திருக்க வேண்டும். அதன் பின் துணியில் இருக்கும் திரிந்த பாலை 1 ப்ளேட்டில் எடுத்துக் கொண்டு பிசைய வேண்டும்.


பிறகு பிசைந்த (மாவு போல் உள்ள) பாலை சிறிய உருண்டைகளாக பிடித்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து பாகு செய்து கொள்ள வேண்டும். 


சர்க்கரை பாகில் பிடித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து, அடுப்பின் தீயை சிம்மில் வைத்து 3 நிமிடம் வேக விட்டு, பின் தீயை மிதமாக வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். 


பின் அடுப்பை ஆஃப் செய்து விட்டு, பாத்திரத்தில் இருக்கும் உருண்டைகளை ஆற வைத்து விட்டு , மேற்பரப்பில் பிஸ்தாவை தூவினால், சுவையான ரசகுல்லா தயார்.


( ஒரு பங்கு சர்க்கரைக்கு அரை பங்கு தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். இப்போது சர்க்கரை உருகி நுரை,நுரையாக வரும்.  அடுப்பில் இருக்கும் சர்க்கரை பாகை சிறிதளவு கரண்டியில் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில், அதில் ஒரு துளியை விட வேண்டும்.  பாகு அப்படியே கரையாமல் நீருக்கு அடியில் சென்று முத்துப்போன்று நின்றால், பாகு பதம் வந்து விட்டது என்று அர்த்தம். சர்க்கரை பாகு தண்ணீரில் கரைந்து விட்டால் பாகு பதம் வரவில்லை என்று அர்த்த. மீண்டும் சில நிமிடங்கள் பாகு பதம் வரும் வரை கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். )


மேலும் படிக்க


FIFA WWC 2023: "உதட்டில் முத்தம் கொடுத்தது தப்புதான்.. மன்னிச்சுடுங்க.." - வீராங்கனையை லிப்லாக் செய்த லூயிஸ் ரூபியேல்ஸ்..!


CM MK Stalin: 'ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி’ - சென்னை தினத்தை ஒட்டி முதலமைச்சர் வாழ்த்து..