Sheer Khurma: ரம்ஜான் ஸ்பெஷல் பாயாசம்... நாவில் எச்சில் ஊறும் சுவையில் ஷீர் குருமா...செய்முறை இதோ!

Sheer Khurma Recipe in Tamil: ரம்ஜான் பண்டிகைக்கு நாவில் எச்சில் ஊறும் சுவையில் ஷீர் குருமா எனப்படும் சுவையான பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Continues below advertisement

தேவையான பொருட்கள்

கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர்

Continues below advertisement

சேமியா - முக்கால் கப்

பேரீச்சைப் பழம் -10

முந்திரி பருப்பு - கால் கப் நறுக்கியது

பாதம் பருப்பு - கால் கப் மெல்லியதாக நறுக்கியது

பிஸ்தா - 2 மேஜைக் கரண்டி நறுக்கியது

சாரை பருப்பு - 1 மேஜைக் கரண்டி

காய்ந்த திராட்சை - 15

சர்க்கரை - கால் கப்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

ரோஸ் எசன்ஸ் - 2 சொட்டு

நெய் - தேவையான அளவு

செய்முறை

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து அதில் முக்கால் கப் சேமியாவை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

இப்போது அதே கடாயில் மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 பேரீச்சை பழங்களை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதை 2 நிமிடங்களுக்கு நன்றாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். 

இப்போது அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து இதில் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆகியவற்றை சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

பின் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இதில் 15 காய்ந்த திராட்சையை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 லிட்டர் முழு கொழுப்பு பாலை சேர்த்து காய்ச்சவும்.பால் ஒரு கொதி வந்ததும் அதில் வறுத்த சேமியாவை சேர்க்க வேண்டும். சேமியாவை வேக விட வேண்டும். சேமியா வெந்ததும் இதனுடன் கால் கப் சர்க்கரை சேர்க்க வேண்டும். 

பின் இதில் கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். இரண்டு சொட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து, பின் வறுத்த பேரீச்சைப் பழம், திராட்சை, பருப்பு வகைகளை சேர்க்கவும். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அடுப்பை சிம்மில் வைத்து சேமியாவை வேக விட்டு இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான ஷீர் குருமா தயார். ‘

இதை சூடாக சாப்பிடலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் பறிமாறலாம். இதன் சுவை அபாரமாக இருக்கும்.

Continues below advertisement
Sponsored Links by Taboola