இது ஒரு சுவையான ராஜஸ்தானி சப்ஜி. இது பாசிப்பருப்பு மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் சுவை குருமா, சென்னா மசாலா ஆகியவற்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். எப்போதும் சப்பாத்திக்கு ஒரே மாதிரியான சைடிஷ் சாப்பிட்டு சலித்துப் போனவர்கள் புதியதாக ஏதேனும் சைடிஷ் சுவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர்களுக்கு நிச்சயம் இந்த ராஜஸ்தானி பாசிப்பருப்பு சப்ஜி நிச்சயம் பிடிக்கும்.
சுவையான கெட்டியான பதத்தில் இருக்கும் இந்த சப்ஜி சப்பாத்தி, தோசைக்கு சிறந்த சைட்டிஷ்ஷாக இருக்கும். பாசிபருப்பு மசாலாக்களுடன் சேர்ந்த இந்த சப்ஜி மிகுந்த சுவை உள்ளதாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த சப்ஜி மிகவும் பிடிக்கும்.
1 கப் பாசி பருப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய், 1 தேக்கரண்டி கடுகு, 1 டீஸ்பூன் சீரகம், 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், ஒரு சிட்டிகை பெருங்காயம், 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா, 2-3 பச்சை மிளகாய் நறுக்கியது, 1 அங்குல இஞ்சி துருவியது. 2-3 பூண்டு, கிராம்பு நறுக்கியது, 1 தக்காளி நறுக்கியது, 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, உப்பு -சுவைக்கேற்ப, அலங்கரிக்க கொத்தமல்லி இலைகள் அலங்கரிக்க, தண்ணீர் - தேவைக்கேற்ப.
1. பாசி பருப்பை நன்றாகக் கழுவித் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிரஷர் குக்கரில் தண்ணீர் சேர்த்து 3 முதல் 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.
2.இப்போது, ஒரு கடாயில் சிறிது எண்ணெயை சூடாக்கி, சீரகம், கடுகு மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். கடுகு உள்ளிட்டவை பொரிந்த உடன், அனைத்து உலர்ந்த மசாலாக்களையும் அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
3.அடுத்து, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இப்போது தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
4.தக்காளி வதங்கியதும் பாசி பருப்பை கடாயில் சேர்க்க வேண்டும். இவற்றை நன்றாக கிளறி விட்டு சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
5.இறுதியாக சுவைக்கேற்ப உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அதன் மேல் ஃப்ரெஷ் கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கவும். அவ்வளவுதான் சுவையான ராஜஸ்தானி பாசி பருப்பு சப்ஜி தயார்.
மேலும் படிக்க