ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படும் வேர்க்கடலையில் எண்ணிலடங்கா சத்துக்கள் நிரம்பியுள்ளன. வேர்க்கடலை நிலக்கடலை மற்றும் மல்லாட்டை என ஒவ்வொரு வட்டார வழக்கிலும் ஒரு பெயர் வைத்து அழைக்கப்படுகிறது இது பூமிக்கு அடியில் விளையும் ஒரு பயறு வகையாகும். நிலக்கடலையை விளைவிப்பதில்,இந்தியாவானது, உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.இந்தியாவைப் பொறுத்தவரை,இதன் பயன்பாடு மிகவும் அதிகம். பொதுவாக விலை அதிகம் மிகுந்த பாதாம்,பிஸ்தா மற்றும் முந்திரி பயிர்களில்தான், சத்துக்கள் நிறைந்து இருப்பதாக,நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.


வேர்க்கடலையில் நிரம்பி உள்ள சத்துக்கள்
புரதம் - 25 மி.கி.
ட்ரிப்டோபான் - 0.24 கி.
திரியோனின் -0.85 கி
ஐசோலூசின் -0.85 மி.கி.
லூசின் - 1.625 மி.கி.
கார்போஹைட்ரேட் - 21 மி.கி.
நார்சத்து - 9 மி.கி.
கரையும் கொழுப்பு - 40 மி.கி.
பாஸ்பரஸ் - 376.00 மி.கி.
பொட்டாசியம் - 705.00 மி.கி.
சோடியம் - 18.00 மி.கி.
துத்தநாகம் - 3.27 மி.கி.
தண்ணீரின் அளவு - 6.50 கிராம்
லைசின் - 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட் - 5 கி
கிளைசின் - 1.512 கி
விட்டமின் - பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
சுண்ணாம்பு - 93.00 மி.கி.
காப்பர் - 11.44 மி.கி.
இரும்புச்சத்து - 4.58 மி.கி.
மெக்னீசியம் - 168.00 மி.
இவை அத்தனையும் வெறும் 100 கிராம் வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் ஆகும். 


ஆகவே அவித்தோ அல்லது வறுத்த வேர்க்கடலை எதுவாகிலும்,தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வரும்போது, மேற்கண்ட சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு வந்து சேரும். ஆகவே தான் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்,பீனட் பட்டர் என்று சொல்லப்படும், வேர்க்கடலையை அரைத்து வெண்ணை போல், சந்தைகளில், விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, வேர்க்கடலையின் பயன்பாடு நிறையவே இருக்கிறது.


வேர்க்கடலை எண்ணெய் இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. வறுத்தவேர்க்கடலை, அவித்த வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை பர்ஃபி என இதை நிறைய வகைகளில் பயன்படுத்துகிறார்கள். மேலும் வேர்க்கடலை சட்னி மற்றும் வேர்க்கடலை துவையல் என இதன் பயன்பாடுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.


இருப்பினும், வேர்க்கடலையில்,கொழுப்பு இருக்கிறது என்பது பரவலான வாதம். ஆனாலும் வேர்க்கடலையில் இருக்கும் கொழுப்பானது கரையக்கூடிய கொழுப்பு.ஆகவே இதை உண்பதினால் பாதிப்பு எதுவும் வருவதில்லை.


சரும பாதுகாப்பிற்கு:


மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றங்கள், விரதம் மற்றும் விட்டமின் ஈ ஆகியவை வேர்க்கடலையில் நிறைந்திருப்பதால் நமது சருமத்தை பளபளப்புடன் வைத்திருக்கிறது.


வெயில் மழை மற்றும் குளிர்காலத்திற்கு உகந்த உணவு:


சில உணவுகளை வெயில் காலத்தில் மட்டுமே உண்ண முடியும் அத்தகைய உணவுகளையும் மழை காலத்தில் சாப்பிட்டால் சளி தொல்லைகள் ஏற்படும் ஆனால் வேர்க்கடலையை எல்லா காலகட்டத்திலும் உண்ணக்கூடிய சிறந்த உணவாகும்


எலும்பு வளர்ச்சிக்கு:
வேர்க்கடலையில்,மக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால்,இதை தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும்போது, வயதான காலங்களில் ஏற்படும், எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது.


குழந்தைகளின் வளர்ச்சிக்கு:
குழந்தைகளுக்கு தினமும்,அவித்தோ அல்லது வறுத்த வேர்க்கடலையையோ அவர்கள் உடலுக்கு ஏற்றவாறு, தயாரித்து கொடுத்தால்,அவர்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இதில் 30 சதவீதம் புரதம் நிறைந்து இருப்பதே, இதற்கு முக்கிய காரணமாகும்.


புற்றுநோயை தடுக்கும் வேர்க்கடலை: ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால், இது புற்று நோய்க்கு எதிராக போராடுகிறது. ஆகவே தினமும் வேர்க்கடலை உண்பது என்பது,புற்றுநோய் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழியாகும்.


எடை குறைப்பு,மூளையின் சுறுசுறுப்பு தன்மை மற்றும் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள உகந்த உணவு என, இதன் நன்மைகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.ஆகவே தினமும் இல்லாவிட்டாலும் கூட, வாரத்திற்கு மூன்று முறையேனும், வேர்க்கடலையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது,சாலச் சிறந்தது.