காலையில நம்ம உணவுல புரதச்சத்து இருக்கணும்னு மருத்துவர் பரிந்துரை பண்ணிட்டே இருக்காங்க. காலையில இட்லி, தோசையும் சாப்பிடணும். ஆனா புரதச்சத்து உள்ள டிபனாவும் மாத்தணுமா? பாசிப்பயறு இட்லி ஒரு பெஸ்ட் ஆப்ஷன்.
தேவையான பொருட்கள்
2 Cup பச்சை பயறு எடுத்துக்கோங்க
வெந்தயம் 1 ஸ்பூன்
1 கப் உளுந்து
உப்பு
செய்முறை : பச்சை பயறை எடுத்து நல்லா கழுவி வெச்சுக்கோங்க. நல்ல தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைச்சுக்கோங்க. உளுத்தம் பருப்பையும் 4 மணி நேரம் ஊறவெச்சிடலாம். பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து ஊற வைச்சுக்கோங்க. முதல்ல பச்சை பயறை தண்ணீர் சேர்த்து அரைத்துவெச்சுக்கோங்க. அதுக்கப்புறம் உளுந்தை தனியா அரைச்சு மாவில் சேர்த்து, 10 மணிநேரம் புளிக்க வைக்கணும். தொடர்ந்து இதில் உப்பு சேர்த்து இட்லி சுட்டு எடுத்துக்கோங்க.
இட்லிக்கு தொட்டு சாப்பிட, கத்தரிக்காய் கொஸ்து, புளி காரச் சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி, பீர்க்கங்காய் துவையல், செள செள தோல் துவையல் இப்படியெல்லாம் வெச்சு சாப்பிட்டா ஆரோக்கியமும் கூடும். சுவையும் அள்ளும்.