Kalyana Sambar Recipe: கமகமகமன்னு கல்யாண சாம்பார் வெச்சுட்டா போதும். காலை உணவுக்கும், லஞ்ச் பாக்சுக்கும், நைட்டு டின்னருக்கும் அதை வெச்சே சூப்பரா சாப்பிடலாம். இன்ஸ்டாவில் கலக்கும் ஷேரோன் - சமையல் வித் ஷேரோனுக்கு நன்றி
கல்யாண சாம்பார் பொடி : கல்யாண சாம்பாருக்கு ஸ்பெஷலான ஒரு பொடி தயார் பண்ணிக்கலாமா? வாங்க..
கடாயைப் காயவெச்சு, முதல்ல ஒரு டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பும், கடலைப்பருப்பும் எடுத்துக்கலாம். கூடவே கால் ஸ்பூன் சீரகம், வெந்தயம், மிளகு எடுத்து, ரெண்டு டேபிள் ஸ்பூன் தனியா, 5 காய்ந்த மிளகாய், ஒரு டீ ஸ்பூன் அரிசு, ஒரு கொத்து கறிவேப்பிலை, நல்லா சிவக்க சிவக்க வறுத்து எடுத்து வெச்சிடுங்க.
ரெண்டு டேபிள் ஸ்பூன் கொப்பரைத் தேங்காய் பொடியை அதே சூட்டுல போட்டு வறுத்துவிட்டுக்கோங்க.
அதுக்கப்புறம் ஒரு சின்ன கட்டிப் பெருங்காயத்தை எண்ணெய் விட்டு லைட்டா வறுத்து, அதையும் வறுத்த பொருட்களோட மிக்சியில போட்டு அரைச்சு வெச்சுக்கணும்.
அதுக்குப்பிறகு முக்கால் கப் துவரம் பருப்பும், கால் கப் பாசிப்பருப்பும் எடுத்து வேகவெச்சு தனியா எடுத்துக்கலாம். (8 பேர் சாப்பிட தேவையான சாம்பார் அளவுக்கு) இதுக்குப் பிறகு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, சீரகம் தாளிச்சு, மூன்று சின்ன மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் கலந்து நறுக்குனது,(ரெண்டு பிடி) 10 பல் பூண்டு போட்டு தாளிச்சுக்கோங்க. இதெல்லாம் வதங்கி வந்ததும், தக்காளியைப் போட்டு வதக்கிடலாம்.
இதுக்குப் பிறகு நறுக்கி வெச்ச அவரைக்காய், கத்தரிக்காய், பீன்ஸ், கேரட் எல்லாத்தையும் போட்டுக்கலாம். முருங்கை, கல்யாணப் பூசணிக்காயையும் சேர்த்துக்கலாம்.
எல்லாத்தையும் கலந்துவிட்டு, அதுல ரெண்டு ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூளையும், நம்ம அரைச்சு வெச்சிருக்கும் ஸ்பெஷல் சாம்பார் பொடியையும் போட்டு கிளறிக்கணும். ஒன்றரை ஸ்பூன் கல் உப்பு போட்டு கிளறிக்கலாம். வேகுறதுக்கான அளவு தண்ணி ஊத்தி பத்து நிமிஷம் நல்லா வேக விடலாம். இதுக்குப்பிறகு ஒரு எலுமிச்சங்காய் அளவு புளி எடுத்து கரைச்சு இதுல ஊத்தி ஒரு கொதி வந்ததும், அதுக்குப் பிறகு வேக வைச்ச பருப்பை இதோட சேர்த்து கலந்து கொதிக்க விடலாம்.
நல்லா கொதி வந்ததும், கொத்தமல்லி தூவல் சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பரிமாறினா, அடடா.. உருளை - பட்டாணி பொரியலோட, வடை, பாயசத்தோட காம்போ கட்டி அசத்துங்க..