கடல் உணவுகளை நம்மில் ஏராளமானோர் விரும்பி சாப்பிடுவோம். மீன், நண்டு, இறால் போன்றவற்றை கொண்டு செய்யப்படும் ரெசிபிகள் பிரபலமானவை. இவை உடலுக்கு நல்லதும் கூட. ஹோட்டல்களில் கடல் உணவுகளை வாங்க வேண்டும் என்றால் அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் அதே பணத்திற்கு நாம் நண்டு, இறால் உள்ளிட்டவற்றை வாங்கினால் அதிக அளவில் மற்றும் தரமாக சமைத்து சாப்பிட முடியும். இப்போது நாம் கடலோர உணவகங்களில் பரவலாக விற்பனைக்கு கிடைக்கும் இறால் வடை எப்படி செய்வது என்றுதான் பார்க்க போறோம். மேலும் இந்த ரெசிபியை மிக எளிதாக செய்து விட முடியும். 


இறால் வடை செய்ய தேவையான பொருட்கள்:




1/2 கப்- தேங்காய் துருவல்

9- சின்ன வெங்காயம்

5- பச்சை மிளகாய்

1/2 ஸ்பூன் -இஞ்சி பூண்டு விழுது

1/2 ஸ்பூன் -கரம் மசாலா

3/4 ஸ்பூன் -சோம்பு தூள்

தேவையான அளவு -உப்பு

தேவையான அளவு-எண்ணெய்


செய்முறை:


இறாலை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


பின் ஒரு மிக்சி ஜாரில் தேங்காய் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 


இதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.


இப்போது இந்த கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி,  இதில் கரம் மசாலா, சோம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். 


அடுப்பில்  கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், தயாராக உள்ள மாவினை எடுத்து வடை போல் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். ( அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரிக்க வேண்டும்.) ஒரு புறம் பொறிந்த பின் மறுபுறம் வேகும் படி திருப்பி போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.  அவ்ளோ தான் சுவையான இறால் வடை தயார். 


மேலும் படிக்க 


Mahua Moitra: ’ நாளை என் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வருவார்கள்’ - பதவி பறிப்பிற்கு பின் பேசிய மஹுவா மொய்த்ரா


Women Premier League: 5 அணிகளின் கைகளில் ரூ.17.65 கோடி.. 30 இடத்திற்காக 165 வீராங்கனைகள் களம்.. இன்று மகளிர் பிரீமியர் லீக் ஏலம்..!