குழந்தைகளிடம் உங்களுக்குப் பிடித்த காய்கறி எது என்று கேட்டால் டக்குனு பொட்டேட்டோ என்று சொல்வார்கள். அவர்கள் மட்டும் அல்ல.. பெரியவர்கள் பலரின் விருப்பமும் உருளைக்கிழங்கு தான். விருப்பமான காய்கறி என்றாலும் அதில் டயட் இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது என்று ஒதுக்கி விடுவார்கள். கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளில் முதன்மையானது காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படும் உருளைக்கிழங்கு. பொதுவாக இதை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது.



 

உருளைக்கிழங்கில் புதைந்து இருக்கும் சத்துக்கள்:

 

உருளைக்கிழங்கில் மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் மற்றும் மாங்கனீஸ் உள்ளது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். உடலுக்கு தேவையான சக்தியை கூட கூடிய தன்மை பெற்றது. குடல் ஆரோக்கியம் மேம்படும். மலச்சிக்கலை தடுக்கும். 

 

உடல் எடையை குறைக்க என்ன செய்யவேண்டும் ?

 

சரியான முறையில் உருளை கிழங்கு சாப்பிடுவதால் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும் என்கிறது மருத்துவ ஆராய்ச்சி.
  

உருளைக்கிழங்கை நன்றாக எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து சாப்பிடுவதால் எந்த நன்மையையும் கிடைக்காது.

 

மாறாக உடல் எடை கூட தான் செய்யும். உருளைக்கிழங்கை எப்போதும் வேகவைத்து, எண்ணெய் இல்லாமல் வறுத்து அல்லது ஆவியில் வைத்துதான் சாப்பிடவேண்டும். அப்போது தான் அதன் அத்தனை நன்மைகளும் உடலுக்கு பொய் சேரும். பிரெஞ்சு பிரைஸ் போல எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதால் உடலுக்கு கேடு தான் வரும். அது உடலில் கரையாத கொழுப்பாக படிந்து விடுகிறது. எனவே உருளைக்கிழங்கை எத்தகைய ஆரோக்கியம் மிக்க உணவு என்பது அதன் செய்முறை மற்றும் அதில் சேர்க்கப்படும் பொருட்களை பொருத்ததே என்கிறார் பிரபல மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர். ஒரு எளிமையான மற்றும் ஆரோக்கியமான உருளைக்கிழங்கு ரெசிபி ஒன்றை நமக்காக பகிர்ந்துள்ளார்.  

 



 

 

தேவையான பொருட்கள்

 

உருளைக்கிழங்கு - 3

ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்

பூண்டு பொடியாக நறுக்கியது 1 டீஸ்பூன்

அரிகனோ - ½ தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - ½ தேக்கரண்டி 

கலந்த மூலிகை மசாலா - ½ தேக்கரண்டி

மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி

தேவையான அளவு உப்பு 

 

செய்முறை: 


 உருளைக்கிழங்குகளை நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெயோடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை பேக்கிங் டிரேயில் வைத்து 425 டிகிரி Fahrenheitல் 45 - 55 நிமிடங்கள் பேக் செய்யவும். பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். பின்னர் சாஸ் உடன் பரிமாறவும்.