வெயில் சுள்ளுனு அடிக்குதா! எவ்வளவு தண்ணி குடுச்சாலும் தாகம் தனியாவே மாட்டேங்குதா!!! மனசு சும்மா சில்லுனு ஏதாவது குடிக்கனுன்னு ஆசைப்படும் இல்லையா? அப்படினா இந்த சம்மர் ட்ரின்க் உங்களுக்காக தான். சட்டுனு ரெடி பண்ணி ஜம்முனு குடிக்கலாம். கோடைக்காலத்து குயின் யாரு நம்ம மாம்பழம் தாங்க!!! மாம்பழம் பிடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா சொல்லுங்க. மாம்பழம்னு சொன்னாலே போதும் வாயில எச்சில் ஊரும். கோடை காலம் வெயிலுக்கு மட்டுமா பேமஸ் நம்ம மாம்பழத்திற்கு தான் ரொம்ப பேமஸ். இந்த சீசன்ல தான் நல்ல சுவையான மாம்பழங்கள் வகைவகையா கிடைக்கும். சின்னவங்க, பெரியவங்க, சுகர் வந்தவங்க, சுகர் வராதவங்கனு எல்லாரும் இந்த மாம்பழத்தை ஒரு கை பாக்காம விடவே மாட்டாங்க. இப்போ நம்ம நல்ல பழுத்த மாம்பழத்தை வைச்சு தான் ஒரு டேஸ்ட்டியான யம்மியான ஒரு சம்மர் ட்ரிங்க சட்டுனு ரெடி பண்ண போறோம்.



இந்த ட்ரின்க் மாம்பழத்தை வச்சுனு சொல்லிட்டேன் ஆனா அந்த ட்ரிங்கோட பேர் என்னனு தெரியுமா கொரியன் மேங்கோ ஷேக். கொரியன் ஸ்டைல் தான் இப்போ எல்லாத்துலேயும்  ட்ரெண்டிங். அதனால தான் நம்ம மேங்கோ ஷேக் கூட ட்ரெண்டிங்கா இருக்கு.





பொதுவாவே மில்க்‌ஷேக் கான்சப்ட் 90ஸ் கிட்ஸுக்கு ஒரு விருந்தான விஷயம். ஏன்னா 90ஸ் காலத்துலதான், பேக்கெட் செய்யப்பட்ட மில்க்‌ஷேக்குகள் பிரபலமாச்சு. இந்த ட்ரின்க் செய்ய ஈஸியா கிடைக்கக்கூடிய மூன்றே பொருட்கள்  போதும். மாம்பழம், சர்க்கரை மற்றும் பால். இந்த மூன்றே பொருட்களை வைத்து டேஸ்டியான, ஹெல்த்தியான ஒரு சம்மர் ட்ரின்க் உடனே ரெடி பண்ணிடலாம்.

நல்ல பழுத்த மாம்பழம் ஒன்றை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  கொள்ளவும். அதனோடு பொடித்த சர்க்கரை 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். ஹெல்த்தியாக சாப்பிட விரும்புபவர்கள் சர்க்கரைக்கு பதில் தேன் சேர்த்து கொள்ளலாம். இந்த கலவையை லேசாக மசித்து கொள்ளவும். 5 - 10 நிமிடங்கள் வரை முடி வைக்கவும். இந்த கலவையை ஒரு கிளாஸ் டம்பளரில் மாற்றி கொள்ளவும். அதனோடு ஐஸ் கியூப்ஸ் சேர்த்து சிறிது வெட்டிய மாம்பழ துண்டுகளையும், குளிர்ந்த பால் கலந்து பரிமாறவும். கொரியன் மேங்கோ ஷேக் ரெடி.  இந்த ட்ரின்க் உடம்பில் இருக்கும் வெப்பத்தை தணிக்கும்.    




மாம்பழம் சாப்பிட்ட சருமம் பளபளப்பா இருக்கும். வெயிலால வர மயக்கம் போகும். நார்ச்சத்து இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இந்த பழத்துல நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் உடம்புல ரத்தத்தை ஊற செய்யும். நரம்பு தளர்ச்சி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இது போல மாம்பழத்தில் பல நன்மை தரும் மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கின்றன. சுவை மட்டும் அல்ல சுவையோடு ஆரோக்கியத்தையும் கொடுக்கும் பழம் மாம்பழம்.

மாம்பழம் சீசன் முடிய போகுது அதனால எல்லோரும் உடனே இந்த கொரியன் மேங்கோ ட்ரின்க உடனே ட்ரை பண்ணி என்ஜாய் பண்ணுங்க.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண