குழந்தைகள் பிறந்ததிலிருந்து, வெளியில் இருந்து தரும் திட உணவு சாப்பிடும் வரை,தாய்ப்பால் மட்டுமே அவர்களுக்கு பிரதான உணவாகும். இப்படிப்பட்ட தாய்ப்பாலின் மூலமாகவே,குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து புரதங்களும்,சத்துக்களும், அவர்களுக்கு கிடைக்கின்றன. ஆனால் இத்தகைய தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள்,மிகவும் கவனமாக,இரண்டு பேருக்கும், சேர்த்து, புரதம்,கலோரிகள் மற்றும் தாய்ப்பால் அதிகம் கிடைக்க செய்யும், உணவுகளை சாப்பிட வேண்டியது, மிகவும் அவசியமாகும்.இப்படி சத்தான உணவுகளை சாப்பிடாமல் போனால்,தாய் மற்றும் சேய் இரண்டு பேருமே உடல் எடை இழப்பு, குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு என,நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகவே தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள்,அவசியம் உண்ண வேண்டிய உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கொண்டைக்கடலை:
பாலூட்டும் தாய்மார்களுக்கு, அதிகப்படியான புரதம் தேவையாக இருக்கிறது.இந்த புரதத்தை தரும் சைவ உணவுகளில் முக்கியமானது, கொண்டைக்கடலை.போதுமான அளவு தாய்ப்பாலை உற்பத்தி செய்ய   கேலக்டாகோகுகள் இதில்  நிறைந்து உள்ளன. இவற்றை தினமும் ஏதாவது ஒரு வடிவில் தாய்மார்கள் அவசியம் சாப்பிட வேண்டும். சுண்டல் மற்றும் கடலைகுழம்பு என,ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகைகளில் சமைத்து உண்ணலாம்.இதிலும் குறிப்பாக,கருப்பு கொண்டைக்கடலையில் நிறைய சத்துக்கள் காணப்படுகின்றன.


பூண்டு:
பாலூட்டும் தாய்மார்களின்,பாலின் வழியாக,குழந்தைக்கு கிடைக்கும் ஆக சிறப்பான நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட கனிமப் பொருட்கள் இந்த தூண்டில் நிறைந்து காணப்படுகிறது. இதை தாய்மார்கள் தினமும் உண்பதின் மூலமாக,வாயு பிரச்சனைகள்,செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு,பால் நன்றாக சுரக்கும்.மேலும் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு திறனும்,இந்த பூண்டை உண்பதன் மூலம் கிடைக்கும்.ஆகவே தினமும் சாம்பார்,குழம்பு |பொரியல் மற்றும் அவியல் வகைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை சமையலில் சேர்த்துக் கொள்ள முடியாவிட்டாலும் கூட, பூண்டை தனியாக நெய் அல்லது நல்லெண்ணையில் வதக்கி  சாப்பிடலாம்.இப்படியாக ஏதாவது ஒரு வடிவில் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.


வெந்தயம்:
வெந்தயத்தில் தாவர ஈஸ்ட்ரோஜன் அதிகம் இருப்பதால், அது தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. ஆகவே தாய்மார்கள் வெந்தயத்தை குழம்பு வைத்து, சோறுடன் கலந்து சாப்பிடலாம். அல்லது வெந்தயத் துவையல் செய்தும் சாப்பிடலாம்.இது சற்றே குளுமையான பொருள் என்பதால், மதிய சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது சிறப்பானது.


பப்பாளிப்பழம்:
பாலூட்டும் தாய்மார்களின்,உடலில் ஆக்ஸிடாஸின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, தாய்ப்பாலின் ஓட்டத்தை அதிகரிக்கிறது.ஆகவே பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் இந்த பப்பாளியை எடுத்துக் கொள்வது ,தாய்மார்களின் உடம்பிற்கும் பால் குடிக்கும் குழந்தைக்கும் சிறப்பானதாகும்.


சுறா புட்டு:
அசைவம் சாப்பிடும் தாய்மார்களுக்கு, பால் நன்கு சுரந்து வர,சுறாவினை கொண்டு செய்யப்படும் உணவினை தருவார்கள்.இதன்படி சுறா மீன் இறைச்சியை அவிழ்த்து எடுத்துக்கொண்டு,அதில் மசாலா பொருட்கள்,தேவையான அளவு காரம், மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி கொடுப்பார்கள்.இதுவும், தாய்மார்களின் உடலுக்கு ஏற்ற ஒரு உணவாகும்.


எள்:
பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் உண்ண வேண்டிய உணவுகளில் எள்ளானது, மிகவும் முக்கியமானதாகும்.கால்சியம், காது மற்றும் ஒமேகா-6 எனப்படும் கரையக்கூடிய நல்ல கொழுப்பு நிறைந்த  உணவு பொருள்,இந்த எள். தாவர ஈஸ்ட்ரோஜன் இதில் நிறைந்துள்ளதால் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு,மிகவும் சிறப்பான உணவு பொருளாகும். இது மட்டுமன்றி,தினமும் உணவில், கீரைகள்,பச்சை காய்கறிகள்,மற்றும் பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது,தாய் செய் ஆகிய இருவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும்.