உலகளவில் பரவலாகப் பயிரிடப்படும் பப்பாளி, அதன் சுவையான பழங்களுக்காக மட்டுமல்லாமல், சமையல் மற்றும் நாட்டுப்புற மருத்துவ மரபுகளில் வேரூன்றிய பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளுக்காகவும் அங்கீகாரம் பெற்று வருகிறது.


பப்பாளிச் செடியின் பல்வேறு பாகங்கள், அதன் பழங்கள், விதைகள் மற்றும் இலைகள், ஆகியவை ஆரோக்கிய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பப்பாளி இலைகள், குறிப்பாக, பப்பாளி இலைச் சாறு, பப்பாளி தேநீர், பப்பாளி மாத்திரைகள் மற்றும் பப்பாளி பழச்சாறு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பப்பாளியில் இயற்கையாகவே அதிக அளவு சத்து நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே உகந்த பழம் இது. இதை சாப்பிடுவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. 


பப்பாளி இலையின் குறிப்பிடத்தக்க குணங்களில் ஒன்று அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பாகும். பப்பாளி இலை சாறு குடிப்பது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது, இது டெங்கு காய்ச்சல் போன்ற நோய்த்ட்தொற்றுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், பப்பாளி இலையில் பப்பெய்ன் மற்றும் சைமோபப்பைன் போன்ற என்சைம்ஸ் நிறைந்துள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமின்றி பொடுகு மற்றும் முடி கொட்டும் பிரச்சனைக்கும் தீர்வாக உள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கே மற்றும் பி நிறைந்த பப்பாளி இலைகளில் ஆல்கலாய்டு இருப்பதால் ஆரோக்கிய நலனுக்கு மேலும் நன்மை பயக்கும் விதமாக உள்ளது என கூறுகின்றனர்.


டெங்கு சிகிச்சை:  


டெங்கு அறிகுறி உள்ளவர்கள் பப்பாளி இலை சாறை அடிக்கடி உட்கொள்வதால் டெங்கு பாதிப்பிலிருந்து விரைந்து குணமடைய உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெங்குவின் சில பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு, தலைவலி, குமட்டல், தோல் அழற்சி மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். டெங்கு காய்ச்சலின்போது பிளேட்லெட் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். மோசமான நிலையில் சிலருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பப்பாளி இலை சாறு டெங்கு சிகிச்சைக்கு டாக்டர்களால் அடிக்கடி பரிந்துரைக்கப்படுகிறது. இது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என நம்பப்படுகிறது. 


அழற்சி எதிர்ப்பு:


பப்பாளி இலை நம் உடலில் உள்ள உள் மற்றும் வெளிப்புற அழற்சிக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது. இது தசை வலி மற்றும் மூட்டு வலியைப் போக்க உதவுகிறது. ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து பரிசோதித்தபோது, அதில் பப்பாளி இலையின் உதவியுடன் எலிகளின் பாதங்களில் உள்ள வலி கணிசமாகக் குறைந்தது கண்டறியப்பட்டது. இதற்கு, முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த பப்பாளி சாறு உதவும் என்று நம்பப்படுகிறது. 


தோல் ஆரோக்கியம்:


பப்பாளி இலையில் ஏராளமான புரோட்டீனை கரைக்கும் என்சைம்கள் உள்ளன, அவை சருமத்தில் தேய்த்தால் இறந்த சரும செல்களை அகற்ற உதவும். இது அடைபட்ட துளைகள் (clogged pores in skin), சருமத்தில் வளரும் உள்முடிகள் மற்றும் முகப்பரு வெடிப்புகளை குறைக்க உதவுகிறது.    


Shakib Al Hasan: இன்று 41 ரன்கள் எடுத்தால், நம்பர் 1 இடம்.. உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனைக்கு காத்திருக்கும் ஷகிப்!


Kilambakkam Railway Station: கேட்டது ரெடி ஆயிடுச்சு...! சுறுசுறுப்பாக நடைபெறும் பணிகள்..! இன்னும் 4 மாசம்தான்..!