பனீர் புரோட்டீன் நிறைந்த உணவு. தேங்காய் பால் உடன் பனீர் புலாவ் செய்வது எப்படி? என காணலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி - ஒரு கப்
பனீர் - 1/2 கிகி
வெங்காயம் -இரண்டு
தேங்காய் பால் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
தாளிக்க
சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ - ஒரு ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
நிலக்கடலை / முந்திரி - ஒரு டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
செய்முறை
தேங்காய் பால் எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய்,இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். மிதமான தீயில் அடுப்பில் குக்கரை வைத்து வெண்ணெய் ஊற்றி சூடாகியதும் அதில் பட்டை, சோம்பு, கிராம்பு, முந்திரி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போடவும். முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். வதங்கும்போதே அதன் நிறம் மாறும். அப்போது அரிசி, சிறிய துண்டுகளாக நறுக்கிய பனீர் கிளறவும். இப்போது அரிசிக்கு தேவையான அளவு தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் ஊற்றவும். இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வெண்டைக்காய் ரோஸ்ட் என உங்களுக்கு விருப்பமானதை உடன் வைத்து சாப்பிட தேர்வு செய்யலாம்.
எடை குறைப்புக்கு பனீர் உதவுமா?
எடை குறைப்பு பயணத்தில் இருக்கும்போது பனீர் நல்லதா என்று கேட்டால் உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்களுக்கு பனீர் சிறந்த தேர்வு. இதில் புரோட்டீன் நிறைந்துள்ளது. பொதுவாகவே புரத உணவுகளுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் குணம் உண்டு. அந்த குணம் பனீருக்கும் உண்டு. இதனால் அதிகப்படியாக உணவு உண்ணும் எண்ணத்தைத் தடுக்கிறது. இதில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.அது சரி, பொதுவாக சீன உணவுகளை நாம் ஆரோக்கியமற்றதாக கருதுவதால், இந்த உணவு எப்படி ஆரோக்கியமானது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். எதையுமே ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிட வேண்டும்.
பொறுப்புத் துறப்பு :
இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.