ஹல்வா என்று சொன்னால் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது . குறிப்பாக இந்தியர்களுக்கு ஹல்வா மிகவும் பிடித்தமான உணவாகும். பனீரை பயன்படுத்தி நாம் பலவகையான ரெசிப்பிகளை செய்திருப்போம். பனீரை பயன்படுத்தி ஹல்வா செய்யலாம். இந்த ஹல்வா புரதச் சத்து நிறைந்ததாய் இருக்கும். இந்த ஹல்வா குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நல்லது. பனீர் ஹல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப்
பால் - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
முழு பாதாம் - 8 முதல் 9
நறுக்கிய பாதாம் - 1 டீஸ்பூன்
முறை :
படி 1: பனீர் ஹல்வா செய்ய, முதலில் பனீரை எடுத்து துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். வேண்டுமானால் பனீரை சிறு, சிறு துண்டுகளாகவும் போடலாம்.
படி 2: இந்த பனீரை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
படி 3: ஒரு கடாயை எடுத்து மிதமான தீயில் சூடாக்கவும், அதில் நெய் சேர்க்கவும். நெய் உருகியதும், அதில் துருவிய பனீரைப் போட்டு சிறிது நேரம் வறுத்து, கரண்டியால் கிளறவும். அது வெளிர் ப்ரெளன் நிறமாக மாறியதும், அதில் பால் சேர்க்க வேண்டும்.
படி 4: பால் மற்றும் பனீர் இரண்டையும் சிறிது நேரம் வேக வைத்த பிறகு, உங்கள் சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் கடாயை மூடி, ஹல்வாவை 5 நிமிடம் வேக விடவும்.
படி 5: ஹல்வாவை இடையிடையே கிளறிக்கொண்டே இருங்கள், இப்படி செய்வதால் கடாயின் அடிப்பகுதியில் ஹல்வா ஒட்டாது. பால் முழுவதுமாக வற்றி ஹல்வா பதம் வரும் வரை ஹல்வாவை வேக விட வேண்டும் .
படி 6: தற்போது கேஸ் ஸ்டவ்வை அணைத்து, அதில் ஏலக்காய் தூள் மற்றும் நறுக்கிய பாதாம் சேர்த்து, நன்றாக கிளறி விட வேண்டும்.
படி 7: சிறிது ஆறிய பிறகு, பன்னீர் ஹல்வாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதை பாதாம் பருப்பால் அலங்கரிக்கவும். தற்போது சுட சுட சூப்பர் சுவையான பனீர் ஹல்வா தயார்.
மேலும் படிக்க,
Watch Video: 'என்ன அப்படியே நின்னுடுச்சி’ .. அந்தரத்தில் தொங்கிய ரோலர் கோஸ்டர்.. வைரல் வீடியோ இதோ..!