இங்கிலாந்து நாட்டில் பொழுதுபோக்கு பூங்காவில் ரோலஸ் கோஸ்டர் ஒன்று அந்தரத்தில் இயங்காமல் நின்ற சம்பவம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


பொழுதுபோக்கு பொருட்காட்சி, தீம் பார்க் எனப்படும் கேளிக்கை பூங்கா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. ஆண்டுக்கு குறிப்பிட்ட மாத காலங்களுக்கு இடையே நம் ஊரில் பொருட்காட்சி, கண்காட்சிகள் போடப்படுவது வழக்கம். அங்கு வரும் மக்களை சுவாரஸ்யப்படுத்தும் வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்களை கவரும் வகையிலான விதவிதமான ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதேபோல் கேளிக்கை பூங்காக்களிலும் இப்படியான செட்டப்பை கொண்டிருக்கும். 


இதில் ராட்டினங்கள் ஏறும்போது ஒருவித த்ரில்லிங்கான உணர்வுடனே செல்வோம். காரணம் எப்போது என்ன நடக்கும் என தெரியாது. ராட்டினங்கள் தொடர்பான விபத்துகளை பார்த்துவிட்டு சென்றால் அவ்வளவு தான். அப்படி நீங்கள் சென்ற ராட்டினம் அந்தரத்தில் நின்றுவிட்டால் அவ்வளவு தான். வேண்டாத தெய்வமில்லை, பயத்தில் வராத அழுகை இல்லை என்னும் அளவுக்கு மரண பீதி ஏற்பட்டு விட்டும். அப்படியான சம்பவம் தான் இங்கிலாந்து நட்டில் நடந்துள்ளது. 


இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்என்ட் எஸ்ஸக்ஸ் பகுதியில் ‛அட்வென்சர் ஐலேண்ட்' என்னும் கேளிக்கை பூங்கா உள்ளது. இங்கு உள்ளே வருபவர்களை மேலும் மகிழ்விக்க பிரமாண்டமான ரோலர் கோஸ்டர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. த்ரில்லரான பயணத்தை விரும்பும் மக்கள் இந்த பூங்காவில் உள்ள ரோலர் கோஸ்டரில் ஆர்வமாக பயணிப்பது வழக்கம். இந்த உபகரணமானது 72 அடி உயரம் கொண்டது.






மேலும் கோஸ்டரின் பாதை பள்ளம், மேடாக உருவாக்கப்பட்டிருக்கும். உண்மையில் இந்த ரோலர் கோஸ்டர் பயணம் என்பது த்ரில் நிறைந்ததாக இருக்கும் என அந்த பூங்காவின் இணையதளத்தில் பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இதனிடையே வழக்கம்போல சில தினங்களுக்கு முன் இந்த ரோலர் கோஸ்டர் இயங்கியுள்ளது. அப்போது 8 வயது சிறுமி உட்பட 8 பேர் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவரின் சாகச பயணம் சிறிது நிமிடத்திலேயே சோகமாக மாறிப்போனது. 


அதாவது 72 அடி உயரத்தில் அப்படியே அந்தரத்தில் நின்ற ரோலர் கோஸ்டர், பயணம் செய்பவர்களையும், கீழே வேடிக்கை பார்த்தவர்களையும் பீதியில் ஆழ்த்தும் வகையில் அமைந்தது. இதனையடுத்து மீட்பு படையினர் வந்து சுமார் 40 நிமிடங்களுக்குப் பின் அனைவரையும் மீட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளனர்.