பனீர் பாதூரா ரெசிபி மிகவும் சுவையானது. இதை குறைந்த நேரத்தில் மிக எளிமையாக செய்துவிட முடியும். இதன் சுவை வித்தியாசமாக நன்றாக இருக்கும். வாங்க பனீர் பாதுரா எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்



  • மாவுக்கு:

  • 500 கிராம் மைதா

  • 2 டீஸ்பூன் ரவை

  • உப்பு சுவைக்கேறப

  • 1/2 கப் தயிர்

  • 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா

  • 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

  • மிதமான சுடு தண்ணீர்

  • எண்ணெய், பொரிப்பதற்கு


 



  • திணிப்புக்கு:

  • 10 கிராம் பனீர்

  • 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலைகள்

  • சிவப்பு மிளகாய் தூள் ஒரு சிட்டிகை

  • 2 டீஸ்பூன் மைதா

  • உப்பு சுவைக்கேற்ப



பன்னீர் பாதூரா செய்வது எப்படி



1. ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, ரவை, தயிர், பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை எடுத்து அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 

2. மாவை வெதுவெதுப்பான நீரில் பிசைந்து அதன் மீது எண்ணெய் தடவவும். இப்போது அதை ஈரமான துணியால் மூடி, ஒன்றரை மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.

திணிப்புக்கு (STUFFING):


1. ஒரு பாத்திரத்தில் துருவிய பனீரை எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு சிவப்பு மிளகாய், சீரகத்தூள், உப்பு மற்றும் பச்சை கொத்தமல்லி சேர்த்து கலக்க வேண்டும்.

 

2.சிறிதளவு மாவு சேர்த்துக் கலக்கினால், பனீரின் தண்ணீர் காய்ந்து விடும்.

 

3.இப்போது மாவு உருண்டைகளை உருவாக்கி, பெரிய மற்றும் சிறிய ரொட்டியை உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
 


4.பெரிய ரொட்டியின் மீது தயாரிக்கப்பட்ட திணிப்பை வைத்து, அதன் மீது ஒரு சிறிய ரொட்டியை வைத்து, எல்லா பக்கங்களிலும் விளிம்புகளை நன்கு மூடி ஓரங்களில் இருக்கும் கூடுதல் மாவை அகற்ற வேண்டும். இதேபோல் அனைத்து பாதுராக்களையும் தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

5.ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அனைத்து பாதுராக்களையும் மிருதுவாகவும் பொன்னிறமாகவும் மாறும் வரை பொரித்தெடுக்க வேண்டும்.

 

6. அவ்வளவுதான் சுவையான பனீர் பாதுராக்கள் தயார். இதை லச்சா வெங்காயத்துடன் (lachha onion) வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 

 

மேலும் படிக்க