குடை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து மசாலா. தோசை, சப்பாத்தி, சாதம் ஆகியவற்றிற்கு நல்ல காம்பினேசனாக இருக்கும் உணவு. 


 என்னென்ன தேவை


சின்ன வெங்காயம் - ஒரு கப்


பெரிய வெங்காயம் - 1


குடை மிளகாய் - 2 


எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


சீரகம் - அரை டீ ஸ்பூன்


இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன்


மல்லி தூள் - அரை டீ ஸ்பூன்


மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்


தக்காளி விழுது - ஒரு கப்


தயிர் / ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை


முதலில் சின்ன வெங்காயம், நறுக்கிய குடை மிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கி தனியே எடுத்துகொள்ளவும். பின்னர், கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் சீரகம், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். இதோடு, அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும். இதோடு, உப்பு, மல்லி தூள்,மஞ்சள் தூள்,மிளகாய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பின்னர், தயிர் அல்லது ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்றாக கிளறவும். இதோடு, வதக்கிய சின்ன வெங்காயம், குடை மிளகாய சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான சப்ஜி ரெடி..


வெள்ளரிக்காய் ரைஸ்


வெள்ளரிக்காய் அனைவரும் விரும்பி உண்ணும் ஒன்று. ஆரோக்கியமான ஒரு தினசரி ருட்டீனுக்கு நல்ல சாய்ஸ். வெள்ளிக்காய் சாதம் எப்படி செய்வது என பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


வேக வைத்த சாதம் - 1 கப்


துருவிய வெள்ளரிக்காய் - ஒரு கப்


துருவிய தேங்காய் - ஒரு கப்


கொத்தமல்லி இழை - ஒரு கைப்பிடி


தாளிக்க..


முந்திரி - 6-7 +


வேர்க்கடலை - கால் கப்


காய்ந்த சிவப்பு மிளகாய் - 2


நெய் - 3 டேபிள் ஸ்பூன்


கடுகு - ஒரு ஸ்பூன்


சீரகம் - ஒரு ஸ்பூன்


உளுந்து - ஒரு ஸ்பூன்


கடலைப் பருப்பு - இரு ஸ்பூன்


கருவேப்பிலை - 1


உப்பு - தேவையான அளவு


செய்முறை


அடுப்பில் மிதமான தீயில் கடாய் வைத்து, அது சூடானவுடன் நெய் ஊற்ற வேண்டும்.  அதில் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்க்கவும். கடுக, சீரகம் வெடித்ததும், காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும். அதோடு, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து வதக்கவும்.


இதோடு, துருவிய தேங்காய், வெள்ளரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். இதோடு வேக வைத்த சாதத்தை கலந்து வதக்கவும். கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான வெள்ளரிக்காய் சாதம் ரெடி.