கேரளாவில் எல்லா ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைக் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என மொத்தம் 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதில் கடைசி நாளான திருவோணம் முக்கியமாப நாளாகிறது. ஓணம் திருநாளில் மகாபலி பூவுலகுக்கு வருவதாக கேரள மக்கள் நம்புகின்றனர். இதற்காக அவரை வரவேற்கும் வகையில் மொத்தம் 10 நாட்கள் இந்த பண்டிகையை அவர்கள் கொண்டாடுகின்றனர். மக்களைக் காண வரும் மன்னன் மகாபலியை வண்ண மலர்களால் கோலமிட்டு வரவேற்பது வழக்கம். மேலும் அவருக்கு பிடித்த சத்யா உணவை செய்வது ஓணம் திருநாள் வழக்கம். அந்த நாளில் பல வகை காய்கறி, கூட்டு, பொரியல், அவியல், குழம்பு என களைகட்டும் விருந்தே சத்யா எனப்படும். இதில் மிகவும் முக்கியமானது ஸ்வீட்ஸ். இனிப்புதான் இதில் கேரள மக்களும், மகாபலியும் விரும்பும் உணவு. அவை பாரம்பரிய கேரள இனிப்பாக இருக்கும். அவ்வளவு சுவையாக இருக்கும் அந்த ஸ்வீட்ஸை நாம் வாழ்வில் ஒரு முறையாவது சாப்பிட வேண்டும். கேரளத்தில் நண்பர்கள் இருப்பவர்கள் அவர்களிடம் விடுமுறை முடிந்து வரும்போது எடுத்து வர சொல்லலாம். இல்லை என்றால் நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அந்த அளவுக்கு எளிதானதுதான் அது.


உன்னியப்பம்


உன்னியப்பம் என்பது அரிசி, நெய், மசித்த வாழைப்பழம், வெல்லம் மற்றும் தேங்காய் போன்ற அடிப்படை பொருட்களால் செய்யப்பட்ட இனிப்பு பணியாரம் ஆகும். இது ஓணம் சத்யா கொண்டாட்டங்களின் போது பரிமாறப்படுகிறது.



பாலடை பாயசம்


கேரளாவில் மிகவும் பொதுவான பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான பலடா பாயாசம் அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஓணம் பண்டிகையை ஒட்டி செய்யப்படுகிறது. இந்த டிஷ் பாலில் சேமியா மற்றும் அரிசியை வேகவைத்து, ஏலக்காய், சர்க்கரை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றால் செய்யப்படுகிறது. இதனை இன்னும் சுவையாக மாற்ற, முந்திரி பருப்புகள் மற்றும் திராட்சை போன்ற உலர்ந்த பழங்களையும் சேர்க்கலாம்.


தொடர்புடைய செய்திகள்: கோவையில் ஒரே அறையில் கதவின்றி கட்டப்பட்ட 2 கழிவறைகள் - நெட்டிசன்கள் விமர்சனம்


வாழைப்பழ அல்வா


வாழைப்பழ அல்வா கேரளாவின் மற்றொரு பிரபலமான இனிப்பு பண்டமாகும். இனிப்பு, பளபளப்பான அமைப்பு மற்றும் அடர் பழுப்பு நிற வண்ணத்தில், அம்மாநிலத்தில் கிடைகவ்முக்கிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது சர்க்கரை, நெய், பாதாம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பழுத்த வாழைப்பழத்துடன் தயாரிக்கப்படுகிறது. வாழைப்பழ அல்வா சுவையானது மட்டுமல்ல உடலுக்கு மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள்.



அட பிரதமன்


வெல்லம் மற்றும் தேங்காய்ப்பால் ஆகியவற்றுடன் கூடிய கேரளா பாணி அரிசி புட்டுதான் அட பிரதமன். இதன் பெயரை போலவே இதனை சாப்பிடும்போது 'அட' சொல்ல வைக்கும். குறிப்பாக ஓணத்தன்று சத்யாவுடன் பரிமாறப்படுகிறது. இந்த பாரம்பரிய இனிப்பு, தேங்காய் பால் மற்றும் வெல்லப் பாகில் சமைக்கப்பட்டு உண்மையான கேரள சுவையை கொண்டுள்ளது. இது அரிசி மற்றும் பிசையப்பட்ட வாழைப்பழம் மற்றும் உலர் பழங்களால் அதிக சுவை பெறுகிறது.


தேங்காய் லட்டு


தனித்துவமான மற்றும் வித்தியாசமான சமையல் குறிப்புகளுடன் இந்தியா முழுவதும் தயாரிக்கப்படும் லட்டுகள். எளிதில் செய்யக்கூடிய ரெசிபி இது. தேங்காய் லட்டுவை பால், சர்க்கரை பாகு கொண்டு செய்யலாம். உங்கள் விருப்பத்தைப் பொறுத்து, நீங்கள் பச்சை அல்லது உலர்ந்த தேங்காய் இரண்டையும் பயன்படுத்தலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண