ஒவ்வொரு இஸ்லாமிய ஆண்டின்போதும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். கொள்கை, தொழுகை ஆகிய இரு பெரும் கடமைகளை அடுத்து 3வது கடைபிடிக்கப்படும் கடமையாக நோன்பு உள்ளது.


ரமலான் மாதத்தில்தான் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன், இறைவனிடம் இருந்து அவரது தூதர் முகம்மது நபிக்கு, வானவர் ஜிப்ரீல் மூலம் முதன்முறையாக அருளப்பட்டது. இதன் காரணமாக ரமலான் புனித மாதமாக முஸ்லிம்களால் கருதப்படுகிறது.


இஸ்லாமியர்கள் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்டது. வழக்கமாக இந்த சீசனில் தமிழகம் முழுவதிலும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு மாதத்துக்கு கஞ்சி தயாரிக்கப்படும். ’நோன்பு கஞ்சி’ எனச் சொல்லப்படும் அதை பொதுமக்கள் அனைவருக்கும் விநியோகம் செய்வதோடு, பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்கள் அதை அருந்துவார்கள். நோன்புக் கஞ்சி ருசியாக இருக்கும் என்பதாலேயே அது மிகப் பிரபலம். அதை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.


பச்சரிசி - 1 கப்


பாசி பருப்பு - 1/2 கப்


கடலைப் பருப்பு - 1/2 கப்


துவரம் பருப்பு - 1/2 கப்


சின்ன வெங்காயம் - 8


பட்டை - 1


கிராம்பு - 4


தக்காளி - 1


இஞ்சி - சிறிதளவு


பூண்டு - 10 பல்


வெங்காயம் - 1 (மீடியம் அளவு)


கேரட் - 1 (சின்னதாய் நறுக்கியது)


மல்லிக்கீரை - தேவைக்கேற்ப


பச்சை மிளகாய் - 3


கெட்டியான தேங்காய் பால் - 1 கப்


செய்முறை:


முதலில் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு கடாயில் பாசிப்பருப்பை நன்கு வறுக்க வேண்டும். பிறகு, குக்கரில் பச்சரிசி, வறுத்த பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, நறுக்கிய இஞ்சி, 10 பல் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லிக்கீரை, கேரட் ஆகிய அனைத்தையும் சேர்த்து 8 கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.