நவராத்திரி கொண்டாட்டத்தின்போது வீடுகளில் சிறப்பு வழிபாடு செய்வதுண்டு. அப்படியான வழிபாடுகளின்போது ஸ்நாக்ஸ் செய்வதற்கு என்ன திட்டமிடுவதற்கு சில உணவு வகைகள் பற்றி காணலாம். 


தசரா, துர்கா பூஜை என பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடும் ஒன்றாக நவராத்திரி விழா இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்குரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களுடன் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் என  ஒன்பது நாள்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சில கோயில்களில் கொலு வைக்கும் பழக்கமும் உண்டு. சிறப்பு பூஜைகளுக்கு சுண்டல், இனிப்பு வகைகள் உள்ளிட்டவை செய்வதுண்டு.


நவராத்திரி விரதம் இருப்பது வளம் தரும் என்று சொல்லப்படுகிறது. நவராத்தி விழா கொண்டாடத்தின் போது விரதம் முடித்து வழிபாடு செய்யும்போது பிரசாதமாக செய்து சாப்பிட சிலவற்றை இங்கே காணலாம். 


ஜவ்வரிசி டிக்கி


என்னென்ன தேவை?


ஜவ்வரிசி - 250 கி


உருளைக்கிழங்கு - 100 கி


வேர்க்கடலை - 50 கி


இஞ்சி - 10 கி


பச்சை மிளகாய் - 2


கொத்தமல்லி இலை - சிறிதளவு


சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன்


நெய் - தேவையான அளவு


செய்முறை:


ஜவ்வரிசியை நன்றாக சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த ஜவ்வரிசியை வடிக்கட்டி தனியாக வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைக்கவும்.


ஒரு பாத்திரத்தில் நன்றாக வேக வைத்த உருளைக்கிழங்கு, வறுத்து வேர்க்கடலை, பொடியாக நறுக்கி இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, சீரகப் பொடு, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் ஜவ்வரிசியை சேர்த்து கலக்கவும்.


இப்போது மிதமான தீயில் தோசைக் கல்லை வைத்து நெய் சேர்த்து ஜவ்வரிசி கலவையை கட்லெட் செய்வது போல தயார் செய்து அதை ரோஸ்ட் செய்ய வேண்டும். இரு புறமும் நன்ரக பொன்னிறமாகும்வரை வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் ஜவ்வரிசி டிக்கி, கட்லெட் தயார்.


ஜவ்வரிசி பாயசம்


சேமியா, பால், ஜவ்வரி, சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை வைத்து தயாரித்து விடலாம் பாயசம். இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு சாப்பிடலாம். இதோசு மக்கானாவை சேர்க்கலாம்.