நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. தசரா, துர்கா பூஜை என பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடும் முறைகளில் வேறுபாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்குரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களுடன் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் என ஒன்பது நாள்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சில கோயில்களில் கொலு வைக்கும் பழக்கமும் உண்டு.
நவராத்திரி விரதம் இருப்பது வளம் தரும் என்று சொல்லப்படுகிறது. நவராத்தி விழா கொண்டாடத்தின் போது விரதம் முடித்து வழிபாடு செய்யும்போது பிரசாதமாக செய்து சாப்பிட சிலவற்றை இங்கே காணலாம்.
பாதாம் அல்வா:
என்னென்ன தேவை?
பாதாம் - ஒரு கப்
வெல்லம் - 3/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
ஏலக்காய் பொடி -1/2 டீஸ்பூன்
குங்கும பூ - சிறிதளவு
பால் - 1/2 கப்
செய்முறை:
பாதாம் அல்வா செய்வதற்கு தேவையான அளவு பாதாம் எடுத்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கவும்.
மிதமான தீயில், அடுப்பில் அடி கனமான வாணலியை வைக்கவும். அதில் சிறிதளவு நெய் சேர்த்தி ஏலக்காய் தூள், தண்ணீர், வெல்லம், பொடித்த பாதாம் அகியவற்றை கொட்டி நன்றாக கிளறவும். பாதம் பாலில் வேக வைப்பது சுவையாக இருக்க உதவும்.
பாதம் வெந்துவிட்டால் அதிலிருந்து எண்ணெய் வெளிவரும். நிறம் மாறும். அப்போது, சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கிளறவும். இப்போது குங்கும பூ, முந்திரி, திராட்ச்சை நெய்யில் வறுத்தி சேர்க்கலாம்.
சபுதானா ஆப்பிள் பாயசம்:
என்னென்ன தேவை?
பால் - 2 கப்
ஜவ்வரிசி - 3/4 கப்
ஏலக்காய் பவுடர்- 1/4 டீஸ்பூன்
குங்கும் பூ - சிறிதளவு
நட்ஸ் - சிறிதளவு
ஆப்பிள் - 2
வெல்லம் - இனிப்பு தேவையான அளவு
செய்முறை:
இதற்கு ஜவ்வரிசியை தண்ணீரில் 3-4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பாதாம், முந்திரி, சூரியகாந்தி விதைகள், வெள்ளிரி விதை உங்களுக்கு பிடித்ததை இதில் சேர்க்கலாம்.
ஜவ்வரிசி நன்றாக ஊறிய பின்பு, ஒரு பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். ஜவ்வரிசி கண்ணாடி போல தெரிந்தால் நன்றாக வெந்துவிட்டது என்று பொருள். இப்போது பால், வெல்லம், ஏலக்காய் பொடி, சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இனிப்புக்காக கண்டன்ஸ்டு மில்க் கூட சேர்க்கலாம். பாயசம் நன்றாக கொதித்து தயாரானதும் நெய்யில் வதக்கிய சீட்ஸ், நறுக்கிய ஆப்பிள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை சூடாகவோ அல்லது ப்ரிட்ஜ்ஜில் வைத்து ஜில்லென்று சாப்பிடலாம்.