நவராத்திரிக்கு விதவிதமான ரெசிபிகளை செய்து படையல் போடுவது வழக்கம். குறிப்பாக நவராத்திரிக்கு படையல் போடுவதற்கு என்றே பல்வேறு பிரபலமான ரெசிபிகள் உள்ளன.  அதில் சுவையான மூன்று விதமான ரெசிபிக்களை எப்படி செய்வதென்று தற்போது பார்க்கலாம். கிசிலி, கேரட் பாசந்தி, ஹானி பால்ஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...


சிகிலி ரெசிபி


தேவையான பொருட்கள்:


கறுப்பு எள்-50 கிராம்.  வெல்லம் – 50 கிராம்.


செய்முறை:


கறுப்பு எள்ளை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின் வடிகட்டி உலர்த்த வேண்டும். நன்கு  தண்ணீர் காய்ந்த பின் கடாயில் சிறிது சிறிதாக வறுக்க வேண்டும். ஆறிய பின்பு கையால் தேய்த்து தோலை நீக்கி, புடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


பிறகு எள்ளை மிக்ஸியில் சேர்த்து பாதி அரைபடும் அளவு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் பொடித்த வெல்லத்தை சேர்த்து,  நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இவற்றை உருண்டைகளாக பிடித்தால் கிசிலி ரெடி. 


கேரட் பாசந்தி


தேவையான பொருட்கள்:


பால் – 4 கப், கேரட் – ஒன்று, பாதாம்- 5, முந்திரி – 5, சர்க்கரை – ஒரு கப்.


செய்முறை:


முதலில் பாதாமையும் முந்திரியையை 15 நிமிடம் பாலில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கேரட்டை துருவிக்கொண்டு, பாலில் ஊற வைத்த  பாதாம், முந்திரியையும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பாலை அடி கனமான பாத்திரத்தில் காய்ச்ச வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை சுண்ட விட வேண்டும். பாத்திரத்தின் ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு சர்க்கரை, அரைத்த கேரட் விழுதை பாலில் சேர்த்து மீண்டும் நன்கு கெட்டியாக கிளரி ஈறக்கினார் கேரட் பாசந்தி ரெடி.


ஹனி பால்ஸ்


தேவையானவை:


பாதாம் -10, முந்திரி-12,  வேர்க்கடலை – 10, பேரீச்சைப்பழம் – 4, தேன் – 2 டீஸ்பூன்.


செய்முறை:


பாதாம், முந்திரி, வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியே கடாயில் வறுத்து  ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் விதை நீக்கிய பேரீச்சைப்பழம்  துண்டுகளை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கலவையுடன் தேன் கலந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் டேஸ்டியான ஹனிபால்ஸ் ரெடி. 


மேலும் படிக்க


Pori Dosa :பொரியில் சுவையான தோசை செய்யலாம் தெரியுமா? வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்...


Chettinad Rangoon Puttu: சுவையான செட்டிநாடு ரங்கூன் புட்டு... எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...