இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான உணவு வகைகள் பிரசித்தி பெற்றதாக உள்ளன. ஆனால், அனைவரையும் இணைக்கும் ஒரு சில உணவு வகைகளில், பிரியாணியும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஐதராபாத் பிரியாணி, லக்னோ பிரியாணி மற்றும் கொல்கத்தா பிரியாணி என பலவகைகளில், இந்த உணவு கிடைப்பது அனைத்து தரப்பு மக்களும் பிரியாணியை விரும்புவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.


ஜொமேட்டோ:


இந்நிலையில் தான், நடப்பாண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகள் தொடர்பாக ஜொமேட்டோ நிறுவனம் முழு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், இந்தியர்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட  உணவு வகைகளில் மீண்டும் பிரியாணி  முதலிடம் பிடித்துள்ளது.


ஜொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒவ்வொரு நிமிடத்திற்கும் இந்தியாவில் 186 பிரியாணி ஆர்டர்கள் டெலிவெரி செய்யப்படுகின்றன. கடந்தாண்டு நொடிக்கு இரண்டு பிரியாணி ஆர்டர்களை வழங்கியதாக தெரிவித்த ஜொமேட்டொ நிறுவனம் ,நடப்பாண்டில் அந்த விவரங்களை வெளியிடவில்லை. அண்மையில் ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்ட ஆண்டறிக்கையில், இந்தியாவில் நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர்கள் கிடைப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இரண்டு முக்கிய உணவு டெலிவெரி செயலி நிறுவன அறிக்கையின் அடிப்படையில், இந்தியர்கள் அதிகம் உண்ணும் உணவு வகையில் இந்தாண்டும் பிரியாணி தான் முதலிடம் பிடித்துள்ளது.






அடுத்தபடியாக, நிமிடத்திற்கு 139 ஆர்டர்கள் மூலம், அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகையில் பீட்சா  இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஜொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கரக்பூரை சேர்ந்த டினா என்பவர் ஒரே ஆர்டரில் அதிகபட்சமாக ரூ.25,455 மதிப்பிலான பீட்சாக்களை ஆர்டர் செய்துள்ளார். அதோடு, தந்தூரி சிக்கன், பட்டர் நான், வெஜ் ஃபிரைடு ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் ஃபிரைடு ரைஸ் மற்றும் வெஜ் பிரியாணி போன்றவையும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் இடம்பெற்றுள்ளன.


ஜொமேட்டோவில் அதிகளவில் ஆர்டர் செய்த நபர்:


அன்கூர் என்ற டெல்லியை சேர்ந்த நபர், நடப்பாண்டில் மட்டும், 3,330 முறை ஜொமேட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதாவது சராசரியாக நாள் ஒன்றிற்கு அவர் 9 முறை ஆன்லைனின் உணவு ஆர்டர் செய்துள்ளார்.


அதிகளவில் சேமிப்பு பெற்ற நபர்:


மும்பையைச் சேர்ந்த நபர் ஜொமேட்டோ செயலியில் செய்த மொத்த ஆர்டர் மூலம் ரூ. 2,43,490-ஐ சேமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிக தள்ளுபடிகளை பெற்ற நகரம்:


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராய்கஞ்ச் நகரம் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்டர்களில் 99.7 சதவீத ஆர்டர்களுக்கு ப்ரோமா கார்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.


Zomatoவில் தேடப்பட்ட வேடிக்கையான கேள்விகள்?


1. ஓரியோ பக்கோடா என 4, 988 முறை தேடப்பட்டுள்ளது


2.  எலான் மஸ்க் உணவு என 724 முறை தேடப்பட்டுள்ளது