உடல் எடையை குறைப்பது எளிதான காரியம் அல்ல, குறிப்பாக தொப்பையை குறைப்பது என்பது இமாலய இலக்கு.  இருப்பினும் இதற்கு ஆயுர்வேதத்தில் சில குறிப்பிடத்தக்க சிகிச்சைகள் உள்ளன. அவை  தொப்பை கொழுப்பை அகற்றுவது மட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்க இயற்கை உத்திகளையும் வழங்குகிறது. உடற்பயிற்சியின்மை, அதிக தூக்கம், ஆரோக்கியமற்ற உணவு, மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்கள் அனைத்தும் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கின்றன.


எனவே, ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது விரும்பிய முடிவுகளைப் பெறுவதற்கு, "உணவு, உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம்" ஆகியவை உங்கள் வாழ்க்கையில் இணைக்கப்பட வேண்டிய முக்கியமான காரணிகளாகும்.


ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிம்பிள் ஜங்தா இன்ஸ்டாகிராம் பதிவில் எடை இழப்புக்கான சில ஆயுர்வேத வைத்தியங்களைப் பகிர்ந்துள்ளார். "உடலின் அதிகப்படியான கிலோக்கள் பல தொடர்புடைய மருத்துவ சிக்கல்களை உருவாக்கும். சில பிரச்சினைகள் விரைவில் தெரியும் போது, சில நீண்ட காலத்திற்கு பிறகு மட்டுமே தோன்றும். நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோய், இதயப் பிரச்சனைகள், நினைவாற்றல் இழப்பு, துரிதப்படுத்தப்பட்ட முதுமை மற்றும் கர்ப்பகால சிக்கல்கள் போன்ற 10 சுகாதார பிரச்சனைகளை நீங்கள் அதிக எடையினால் சந்திக்க நேரிடும்.






ஷதாவரி
ஷதாவரி பொடியை காலையில் வெதுவெதுப்பான நீர் அல்லது பாலுடன் பயன்படுத்த நிபுணர் பரிந்துரைக்கிறார்.


மேத்தி (வெந்தயம்)
இது எடை குறைக்கும் மூலிகையாக கருதப்படுகிறது. ஒரு ஸ்பூன் விதைக் கலவையை மிக்ஸியில் அரைத்து வெந்தய விதைகளை ஒரு கரடுமுரடான பேஸ்ட்டாக உருவாக்கவும். அதனுடன், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கிளறி சாப்பிடவும்.


க்ரீன் டீ
ஒரு கடாயில் 5-6 துளசி இலைகளை வேகவைத்து, பின்னர் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும். வடிகட்டிய பின் குடிக்கவும். கிரீன் டீயில் EGCC இருப்பது உடலின் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்த உதவுகிறது.


இஞ்சி
இஞ்சி வளர்சிதை மாற்றம் மற்றும் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை மேம்படுத்துகிறது.  நறுக்கிய இஞ்சியுடன் தண்ணீரை சில நிமிடங்கள் கொதிக்கவைத்து, வடிகட்டி, குடிக்கவும்.