ரொட்டி, சாதம் போன்றவற்றிற்கு வழக்கமான குருமா, சென்னா, சாம்பார் போன்ற சைடிஷ்களை சாப்பிட்டு போர் அடித்து விட்டதென்றால் நீங்கள் புதியதாக ஏதேனும் சைடிஷ் ரெசிபியை ட்ரை பன்னலாம். மிக்ஸ்டு வெஜ் தேங்காய் கிரேவி உங்களுக்கு சிறந்த சாய்சாக இருக்கும்.  இந்த மிக்ஸ்டு வெஜ் தேங்காய் கிரேவி ஒரு வித்தியாசமான மற்றும் சிறந்த சுவையில் இருக்கும். இந்த கிரேவியை சப்பாத்தி, தோசை, இட்லி ஆகியவற்றுடன் வைத்து சாப்பிடலாம். இதன் சுவை உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வாங்க மிக்ஸ்டு வெஜ் தேங்காய் கிரேவி எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


1 கப் தேங்காய் பால், 2 கப் கலந்த காய்கறிகள் (கேரட், பச்சை பட்டாணி, காலிஃபிளவர், பிரஞ்சு பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்றவை), 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1/2 டீஸ்பூன் சீரக தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள், 2 டீஸ்பூன் புளி கூழ் / தக்காளி கூழ், 1 வெங்காயம்- நறுக்கப்பட்டது, 2-3 பச்சை மிளகாய் கீறியது. 1 கொத்து கறிவேப்பிலை, 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 தேக்கரண்டி கடுகு, உப்பு- சுவைக்கேற்ப, 2 டீஸ்பூன் எண்ணெய், அழகுபடுத்த கொத்தமல்லி இலைகள்.


செய்முறை


1.காய்கறிகளை சுத்தம் செய்து, நறுக்கி, வேக வைக்க வேண்டும். பின்னர் இதை ஆற வைக்க வேண்டும்.


2.ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். கடு பொரிந்ததும்,  கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்க வேண்டும்.


3.வெங்காயம் நிறம் மாறியதும், கரம் மசாலா தவிர மேலே பட்டியலிடப்பட்டுள்ள மசாலா தூள் அனைத்தையும் சேர்க்கவும். இதை ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.


4.அடுத்து, வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.


5. இப்போது தேங்காய் பால் சேர்க்க வேண்டும். தக்காளி கூழ் மற்றும் உப்பு சேர்த்து கிளற வேண்டும்.


6. இதனை குறைந்த தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.


7. இப்போது கரம் மசாலா தூவி கிளறி விட்டு ஒரு நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாற வேண்டும்.  இந்த கிரேவி சப்பாத்தி உள்ளிட்டவையுடன் வைத்து சப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இந்த கிரேவி பிடிக்கும். 


மேலும் படிக்க


TRB Exam: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: 2,222 பணியிடங்கள்; ஜன. 7ல் தேர்வு - டிஆர்பி அசத்தல் அறிவிப்பு


AIADMK Alliance Talks : திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஸ்கெட்ச்? மறைமுகமாக பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக?