குளிர் காலம் வந்துட்டாலே போதும் மனசு ஸ்நாக்ஸ் தேடி அலையும். அதுவும் சூடா... சும்மா மொறு மொறுன்னு ஒரு ஸ்நாக்ஸ் தேடும். அப்படியான ஸ்நேக்ஸ் தேடி அலையும் மனங்களுக்காக இந்த ரெசிபி. ப்ரெட் மசாலா ரெசிபி.


ப்ரெட் மசாலா ரெசிபி:


தேவையான பொருட்கள்


6 முதல் 8 ஸ்லைஸ் ப்ரெட்
1 மீடியம் சைஸ் வெங்காயம்
1 மீடியம் சைஸ் தக்காளி
1 அங்குலம் இஞ்சி
4 முதல் 5 வெள்ளைப் பூண்டு பற்கள்
2 பச்சை மிளகாய்கள்
அரை டீஸ்பூன் மிளகாய் தூள்
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு
சாட் மசாலா
மற்றும் மல்லி இலை


1. மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.


2.ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அதில் சீரகம் சேர்த்து அது பொரிந்தவுடன் அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.


3. அதில் பச்சைவாடை போன பின்பு மஞ்சள், மிளகாய் பொடி, உப்பு சேர்க்கவும்.


4. பின்னர் பிரெட்டை சிறு துண்டுகளாக வெட்டி அதில் சேர்க்கவும்.


5. பிரெட்டில் மசாலா நன்றாக பிடித்த பின்னர். அதை அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு மல்லி இலை தூவி பறிமாறவும்.


பருவகால நோய்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு, நாம் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் சிறிது கவனமாக இருப்பது நல்லது. இதன் அடிப்படையில், நாம் அனைவரும் குளிர்காலத்தில் நம் உடலை சூடேற்றக் கூடிய உணவுகள் எவை என்பதை தெரிந்து கொண்டு, அதனை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.


பச்சை காய்கறிகள் ஆனது, அழற்சி எதிர்ப்பு (ஆன்டி இன்ஃபிளாமேட்டரி) பண்புகளைக் கொண்டுள்ளது. குளிர் காலத்தில் கருணை கிழங்கு (குறிப்பாக, ஊதா நிற கருணை கிழங்கு), நூக்கல், முள்ளங்கி, கேரட், பீட்ரூட், சக்கரவள்ளி கிழங்கு போன்ற வேர் உள்ள காய்கறிகளை நீங்கள் உணவில் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும். பருவகால பழங்களில் நுண்ணூட்டச்சத்துக்கள் (மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ்) மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை தவிர, சருமத்தின் நீரேற்றத்திற்கும் இந்த பருவகால பழங்கள் உதவுகின்றன. குளிர் காலத்தில் சீத்தாப்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடலாம்


குளிர் காலத்தில் எள் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம். எள்ளில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆல் நிறைந்துள்ளது. மழைக்காலங்களில் வேர்க்கடலை வண்டிகளைப் பார்த்தால் விட்டுவிடாதீர்கள். வேர்க்கடலையில் வைட்டமின் பி, பாலிபினால்கள், மற்றும் அமினோ அமிலங்கள், போன்றவை நிறைந்துள்ளது