Maggi Biryani: ராத்திரி தூக்கம் கலைஞ்சு பசிக்குதா? மேகி பிரியாணி செய்து அசத்துங்க - ரெசிபி!

Maggi Biryani:புதிய வகையில் மேகி செய்ய விரும்புபவர்களுக்கான ரெசிபி இது.

Continues below advertisement

மேகி, பிரியாணி ரெண்டுமே பிடிக்கும் என்பவர்கள் மேகி பிரியாணி செய்து சாப்பிடலாம். வார இறுதிநாள் நண்பர்களுடன் பார்ட்டி, நேரம் செலவிட்டு கதைக்க இருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் இதை செய்து அசத்துங்க. குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். 

Continues below advertisement

மேகி பிரியாணி

என்னென்ன தேவை?

  • மேகி - 4 பாக்கெட்
  • தயிர் - ஒரு கப்
  • ஷெஸ்வான் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கருப்பு மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  • பனீர் - 300 கிராம்
  • கேரட் - 3
  • ஸ்வீட்கார்ன் - ஒரு கப் 
  • பச்சை பட்டாணி - ஒரு கப்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • வெங்காயம் - 2
  • பிரியாணி மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
  •  ஆரிகனோ - 1 ஸ்பூன்
  • வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

மேகி நூடுல்ஸ் செய்வதுபோல இது 2 நிமிடங்களில் தயாராகிவிடாது என்றாலும் நிச்சயம் சுவையாக இருக்கும். முதலில் பனீர், மூன்று வண்ண குடைமிளகாய்,  கேரட், ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை பட்டாணி,ஸ்வீட்கார்ன்  ஆகியவற்றையும் தனியாக எடுக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தயிர்,எலுமிச்சை சாறு, மிளகாய் தூள்,உப்பு,இஞ்சு பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். 

இதற்கிடையில் மேகியை அதோடு கொடுக்கப்பட்டுள்ள மசாலா, ஓரிகானோ சேர்த்து நன்றாக வேக வைத்து எடுக்கவும். அதோடு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஊற வைத்த பனீர், மற்றும் காய்கறிகளை கடாயில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். வெந்ததும் தனியாக வைக்கவும்.

இப்போது, பிரியாணி தயாரிப்பை தொடங்கலாம். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் சிறிதளவு ஊற்றி அதில் பிரியாணி இலை உள்ளிட்டவற்றை சேர்த்து ஒரு கப் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.ஷெஸ்வான் சாஸ்  சேர்த்து வதக்கியதும் வதக்கிய பனீர், காய்கறிகளை ஒரு லேயராக வைக்கவும். அதன்மீது வேக வைத்த மேகியை போடவும். தம் பிரியாணி செய்யும் முறையில் இதை பாத்திரத்தில் நிரப்பவும். ஒரு லேயர் காய்கறி, இன்னொரு லேயர் மேகி என்று நிரப்ப வேண்டும்.

ஒவ்வொரு லேயரின் முடிவிலும் பிரியாணி மசாலா, பொரித்த வெங்காயம் சேர்க்க வேண்டும்.  10 நிமிடங்கள் பாத்திரத்தை மூடி தம் பிரியாணியாக வைக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தூவினால் சுட சுட தம் மேகி பிரியாணி ரெடி.

பூண்டு, எலுமிச்சை, கொத்தமல்லி சேர்த்து கொரியன் ஸ்டைலில் மேகி செய்து அசத்துங்க.

என்னென்ன தேவை?

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

மேகி மசாலா - 2 பாக்கெட்

வேகவைத்த மேகி - 2 பாக்கெட்

எலுமிச்சைச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்  கூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். அதோடு, மேகி மசாலா சேர்த்து வதங்கியதும் அதில் வேக வைத்த மேகியை சேர்க்கவும். அடுத்து, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இதோடு சேர்க்கவும்.

நன்றாக கிளறி, தேவையெனில் உப்பை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். மேகி, சூடாக இருக்கும்போது 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். புதுமையான ஸ்டைல் மேகி ரெடி. 


 

Continues below advertisement
Sponsored Links by Taboola