பீட்ரூட் - கேரட் சூப்


என்னென்ன தேவை? 


வெங்காயம் - 2


பீட்ரூட் - 100கி


கேரட் - 50 கி


மைதா மாவு/ கார்ன்ஃபளார் - 2 டீ ஸ்பூன்


பூண்டு பொடி - 1/4 டீஸ்பூம்


வெஜ்டபிள் ஸ்டாக் - ஒரு கப்


பால் - 200 மி.லி.


சீஸ் ஸ்லைஸ் - 3


வெண்ணெய் - சிறிதளவு


வெஜ்டபிள் ஸ்டாக் செய்முறை:


வெஜ்டபிள் ஸ்டாக் கடைகளில் கிடைக்கும். இதை வீட்டிலேயும் தயாரித்து கொள்ளலாம். கேரட், வெங்காய், , காலிஃப்ளார் பார்ஸ்லி, தைம் (Thyme), பேசில்  இலை (Basil Leaves), வெங்காய தாள் உள்ளிட்டவற்றை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு, அதை வடிக்கட்டி, அதிலிருந்து காய்கறிகளை நீக்கி விட்டால் அவ்ளோதான். வெஜிடபிள் ஸ்டாக் தயார். இந்த தண்ணீரை நீங்க சூப் செய்ய பயன்படுத்தலாம். 


பீட்ரூட் - கேரட் சூப்:


கடாய் சூடானதும் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், பீட்ரூட், கேரட், சேர்த்து நன்றாக வேக வைக்கவும். காய் வெந்ததும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். இதோடு, பூண்டு பொடி, வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் கொதித்ததும் பால், உப்பு, சீஸ் சேர்த்து நன்றாக கிளறினால் பீட்ரூட் - கேரட் சூப் ரெடி..


பீட்ரூட் பச்சடி


என்னென்ன தேவை?


பீட்ரூட் - 3


தயிர் - ஒரு கப்


துருவிய தேங்காய் - ஒரு கப்


காய்ந்த மிளகாய் - 2 


இஞ்சி - சிறிதளவு


சீரகம் - ஒரு ஸ்பூன்


கடுகு - ஒரு ஸ்பூன்


உப்பு தேவையான அளவு


எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை


பீட்ரூட் துருவி எடுக்கவும். தேங்காயையும் துருவி எடுத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், தேங்காய், உப்பு, துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலக்கவும். இதோடு தயிர் சேர்த்தாலும் நன்றாக இருக்கும். 


தாளிக்க..


கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து நன்றாக வதங்கியதும் கருவேப்பிலை சேர்த்து பீட்ரூட் கலவையுடன் சேர்க்கவும். அவ்ளோதான் பீட்ரூட் பச்சடி தயார்.


பீட்ரூட் ரெசிபிகள் சில..


நறுக்கிய பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து நன்றாக மிக்ஸில் அரைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம். டயட்டில்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பீட்ரூட் – கேரட் ஜூஸ் ஹெல்தியான காலை உணவு, இல்லையெனில், காலை உணவு சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு இந்த ஜூஸை குடிக்கலாம். பீட்ரூட் ஜூஸ் செய்யும்போது அதில் ஒரு துண்டு இஞ்சி சேர்க்கலாம். மேலும் பீட்ரூட்- கேரட் ஜூஸில், நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால்  ஜூரணிக்க அதிக நேரம் எடுக்கும். அடிக்கடி பசியும்  எடுக்காது என்பதால் உடல் எடையைக்குறைக்கும் பயணத்தில் இருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம். பீட்ரூட்டில் வைட்டமின்ஏ, வைட்டமின் பி1,வைட்டமின் பி2, க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது.