பார்க்க கண்களை கவரும் இந்த சிக்கன் வறுவல் லேசா சிக்கன் ஊருகாய் டேஸ்ட்ல இருக்கும். எல்லாருக்கும் பிடிக்கும் கண்டிப்ப ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க.

மேலூர் ஸ்டெயில் சிக்கன் வறுவல்

மெயின் டிஷ் கூட வேகமா செஞ்சிடலாம்.. ஆனால் அதுக்கு சைடிஸ் செய்றது வீட்டில் குட்டி போரே நடந்திரும். அப்படியாக கவலைப்படும் நபர்களுக்கு ஒரு ஈசியான ரெசிப்பி தான் இந்த சிக்கன் வறுவல். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நிறைய கல்யாண வீடுகளில் இந்த வறுவல் உணவை சுவைக்க முடியும். மணப்பட்டி மட்டன் சுக்கா சுவை மாதிரி இந்த சிக்கன் வறுவல் இருக்கும். அதனால கல்யாண வீட்டில் மட்டும் அல்ல நமக்கு பிடிச்ச போதெல்லாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். கஞ்சி, ரசம், தயிர் சாதம், சாம்பார் சாதம் என லேசான உணவுக்கு காரசாரமா இருக்கும். சரி வாங்க சிக்கன் வறுவல் செய்முறைக்கு போயிரலாம்....!

தேவையான பொருள்

தோல் நீக்கிய சிக்கன் - 1 கிலோ

சின்ன வெங்காயம் - கால் கிலோ (1/4)

விதை நீக்கிய வர மிளகாய் - 5

சோம்பு - அரை டீ ஸ்பூன்

கருவேப்பில்லை - தேவையான அளவு

சீரகத் தூள் - 1 டீ ஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீ ஸ்பூன்

காஸ்மீர் மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்

கடலை எண்ணெய் - 200 ml

சிக்கன் மசலா - 2 டீ ஸ்பூன்

பூண்டு - 20 பல்

உப்பு - தேவையான அளவு

செய்முறை ;- கடாய் லேசாக சூடானதும் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் சோம்பு சேர்க்கவும். பிறகு இரண்டாக வெட்டிய சின்ன வெங்காயம் சேர்த்து, பொன் நிறமாக வந்தவுடன் வறமிளகாய் சேர்க்க வேண்டும். பின்னர் சிக்கனை சேர்க்க வேண்டும். சிக்கனில் உள்ள தண்ணீர் இறங்கும் வரை 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளரி விடவும். இப்போது ஒரு டீ ஸ்பூன் சீரகத் தூள், ஒரு டீ ஸ்பூன் மிளகுத் தூள், 2 டீ ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 2 டீ ஸ்பூன் சிக்கன் மசாலா இவற்றை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளர வேண்டும். பச்சை வாசனை நீங்கியதும் 1 கைபிடி கருவேப்பில்லை சேர்க்க வேண்டும். அதே போல் பூண்டு லேசாக இடித்து சேர்க்கவும். பிறகு 10 நிமிடம் சிம்மிலேயே வைத்து கடாயை இறக்கினால், கமகம வாசனையான மேலூர் ஸ்டெயில் சிக்கன் வறுவல் தயாராகிவிடும்.

இந்த மாதிரி சிக்கின் வறுவல் பலருக்கும் பிடிக்கும். உப்புக்கறி, தலைக் கறி என்று கிராமத்து சமையலை விரும்பும் நபர்களுக்கு பெஸ்டு சாய்ஸ் இந்த சிக்கன் ரெசிப்பி.