மதியம் ல்ன்ச் பாக்ஸிற்கு செய்யும் உணவு ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருக்க வேண்டும். எளிதாக சமைக்க கூடியதாக இருக்கணும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற ரெசிபி இது. 


சமையலுக்கு அதிகம் நேரம் ஒதுக்காமல் ஏதாவது செய்து சாப்பிடுவதாக இருந்தால் பனீர், ப்ரோக்கோலி ரைஸ் சுவையான இருக்கும். எப்படி செய்வது என காணலாம். 


பனீர் ப்ரோக்கோலி சாதம்:


என்னென்ன தேவை?


பனீர் - 250 கிராம்


ப்ரோக்கோலி - 250 கிராம்


வெங்காய தாள் - சிறிதளவு


மிளகுத் தூள் - ஒரு டீ ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்.)


பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


Soy Sauce - ஒரு டீ ஸ்பூன்


வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


பனீர் ப்ரோக்கோலி ரைஸ் செய்முறை:


முதலில் பனீரை கன சதுர அளவில் சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் வறுத்து எடுத்து தனியே வைக்கவும். ஒரு கடாய் அல்லது குக்கரிலும்  கூட செய்யலாம். சாதம் தனியே வேகவைத்து எடுத்து, ப்ரோக்கோலி, பனீர் இரண்டையும் வறுத்து அதோடு சேர்த்தும் செய்யலாம். 
அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெண்ணெய் ஊற்றி  நறுக்கிய ப்ரோக்கோலி சேர்த்து நன்றாக ப்ரவுன் நிறம் வரும்வரை வதக்கி எடுக்கவும்.


அடுத்து, அதே பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்ட, சேர்த்து நன்றாக வதக்கவும். இதோடு நறுக்கிய  ப்ரோக்கோலி சேர்க்கவும். இப்போது பனீர் துண்டுகள், உப்பு, வேகவைத்த சாதம், மிளகுத்தூள் சேர்த்து கிளறவும். சிறிதளவு சோயா சாஸ் சேர்த்து கிளறி வெங்காயத் தாள் சேர்த்தால் சாதம் தயார்.






குக்கர் அல்லது பாத்திரத்தில் செய்யும்போது, பூண்டு தாளித்து, ப்ரோக்கோலி நன்றாக வதங்கியதும் ஒரு டம்ளர் அளவு அரிசியை அதோடு சேர்த்து வேகும்அளவுக்கு தண்ணீர் ஊற்றி கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடிபோட்டு அரிசி வேகும் வரை காத்திருக்கவும்,. தண்ணீர் அளவோடு வைப்பது நல்லது. 15 நிமிடங்கள் கழித்து ரைஸ் தயாராகியிருக்கும். இதில் காரம் தேவையான அளவு மிளகுத் தூள், வறுத்த பனீர் சேர்த்து கலக்க வேண்டும். பனீர் ப்ரோக்கோலி ரைஸ் ரெடி.