Non Veg Banned Cities: அசைவ பிரியர்களே..! இந்த 7 நகரங்களில் உங்களுக்கு சிக்கல் வரலாம், கட்டாயம் கவனிங்க..!

Non Veg Banned Cities: இந்தியாவில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

Non Veg Banned Cities: இந்தியாவில் 7 நகரங்களில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

அசைவு உணவுக்கு தடை:

இந்தியா அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக உலகம் முழுவதும் பிரபலமானது. ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான மக்கள் இங்கு சுற்றுலா பயணிகளாக வந்து செல்கின்றனர்.  அப்படிச் சொல்ல வேண்டுமானால், ஒவ்வொரு 100 கிலோ மீட்டர் பரப்பளவிற்கும்  இந்திய கலாச்சாரமும் மொழியும் மாறுகிறது. பழக்கவழக்கங்கள் மற்றும் விதிகளும் மாறுகின்றன. அதிலும் உணவும் கலாச்சாரம் என்பது நேர் எதிரானதாக உள்ளது. திருமலை போன்ற பகுதிகளில் அசைவம் என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திலேயே விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் சில மாநிலங்கள் மற்றும் நகரங்களில் அசைவ உணவுகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Sri Lanka Election: இலங்கை அதிபர் தேர்தல் - முன்னிலையில் அனுரா குமார திசநாயகே - சீனாவின் நண்பர், இந்தியாவிற்கு?

1. பாலிதானா, குஜராத்

உலகில் இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள ஒரே நகரம் பாலிதானா. இந்த நகரில் மிருகவதைக்கு எதிராக அரசு கடுமையான விதிகளை விதித்துள்ளது மற்றும் இந்த விதிகளை மீறுவது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது.

2. புஷ்கர், ராஜஸ்தான்

புஷ்கர் அதன் மத முக்கியத்துவத்திற்காக அறியப்படுகிறது, புஷ்கர் புகழ்பெற்ற பிரம்மா கோயில் மற்றும் வருடாந்திர ஒட்டக கண்காட்சி ஆகியவற்றின் தாயகமாகும். இங்கு அசைவ உணவுகள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

3. ரிஷிகேஷ், உத்தராகண்ட்:

ரிஷிகேஷில் அசைவ உணவுகளை விற்பதற்கும் சாப்பிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரம் ஆன்மீகத்தின் மையமாக உள்ளது.

4. அயோத்தி, உத்தரபிரதேசம்:

ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அசைவ உணவுக்கு விதிக்கப்பட்ட தடை, அதன் மத முக்கியத்துவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பெரிய ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு, நகரத்தில் அசைவ உணவுக் கடைகள் நீக்கப்பட்டுள்ளன.

5. ஹரித்வார், உத்தராகண்ட்:

இந்தியாவின் மற்றொரு புனித நகரமான ஹரித்வார், கங்கை நதிக்கரையோரம் உள்ள மலைத்தொடர்களுக்குப் புகழ்பெற்றது. ஆன்மீக சுத்திகரிப்புக்காக யாத்ரீகர்கள் இங்கு வருகிறார்கள். அதன் புனிதத்தை பராமரிக்க இறைச்சி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது.

6. பிருந்தாவனம், உத்தரபிரதேசம்:

கிருஷ்ணர் வாழ்ந்ததாக நம்பப்படும் பிருந்தாவனத்திலும் அசைவ உணவு தடைசெய்யப்பட்டுள்ளது. நகரம் சைவ மற்றும் சாத்வீக விருப்பங்களை வழங்குகிறது.

7. மவுண்ட் அபு, ராஜஸ்தான்:

பிரபலமான மலைப் பகுதி மற்றும் மதத் தலமான, மவுண்ட் அபுவில் அசைவ உணவு தடைசெய்யப்பட்டுள்ளது. நகரின் அமைதியான சூழல் மற்றும் ஆன்மீக தன்மையை கருத்தில் கொண்டு இங்கு அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola