தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப், தயிர் - அரை கப், தண்ணீர் - 1 கப்
தாளிப்பதற்கான பொருட்கள்
சமையல் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 1, துருவிய சிறு கேரட் அல்லது பீட்ரூட் - 1, கொத்தமல்லி தழை - அரை கைப்பிடி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு கேழ்வரகு மாவுடன் ஒரு கப் அளவிற்கு ரவை சேர்க்க வேண்டும்.
ரவையை வறுத்தோ அல்லது வறுக்காமலோ சேர்த்துக் கொள்ளலாம்.
இதே கப் அளவிற்கு அரை கப் தயிர் சேர்த்து, ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, இதை அப்படியே ஊற விட்டுவிட வேண்டும்.
இதனை அடுத்து, அடுப்பைப் பற்றவைத்து அதில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.
கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமானதும், இதனுடன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
ஒரு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி இதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் ஓரளவுக்கு வதங்கி வரும்போது, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இவை வதங்கியதும், ஒரு கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து, பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கேழ்வரகின் பயன்கள்
கேழ்வரகு (Ragi) கால்சியத்தின் சிறந்த மூலமாகும். இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற நிலைகளைத் தடுப்பதற்கும் மிகவும் அவசியம்.
கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற மற்ற தாதுக்களுடன் இணைந்து வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க மற்றும் பராமரிக்க கேழ்வரகு உதவுகிறது.
கேழ்வரகை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் எலும்பு ஆரோக்கியம் மேம்படும் என கூறப்படுகிறது.
கேழ்வரகில், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வழக்கமான குடல் இயக்கங்களை எளிதாக்க கேழ்வரகு உதவுகிறது.
மேலும் படிக்க
Paneer Peas: நாண், சப்பாத்திக்கு பெஸ்ட் காம்போ! பனீர் பட்டாணி கிரேவி செய்முறை இதோ!
Makhana Payasam: பொங்கல் ஸ்பெஷல் ரெசிபி! சுவையான தாமரை விதை பாயாசம் செய்முறை இதோ!