தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்து விட்டாலே, இனிப்புகள் மற்றும் அசைவ உணவுகள் என நாம் அளவுக்கு அதிகமாகவே சாப்பிடுகிறோம்.அதிலும் உற்றார் உறவினர் அருகில் இருக்கும் சமயங்களில்,அவர்களின் வற்புறுத்தலின் பேரிலும் அல்லது நம்முடைய மகிழ்ச்சியின் காரணமாகவும் நிறைய உண்கிறோம். இதனால் உடம்பில் தேவையில்லாமல் கொழுப்புகள், மற்றும் நச்சுக்கள் அதிகளவு சேர்கிறது. இவற்றையெல்லாம் எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்


எடையை குறைப்பதில் கவனம் செலுத்துங்கள்:


பண்டிகைகளுக்கு பிறகு, நம்முடைய எடை, கண்டிப்பாக சற்று உயர்ந்து தான் காணப்படும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ நம் குடும்பத்துடன் சேர்ந்து, கோலாகலமாக கொண்டாடும் இத்தகைய தருணங்களில்,நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ள, உணவை அளவாகவும், கட்டுப்பாடுடனும், உண்ணும் நபர்களே,அளவுக்கு மீறி உண்ணும் தருணங்களில்,சராசரி மனிதர்கள் இன்னும் நிறைய உண்கிறார்கள். இதனால் அவர்களின் எடை ஆனது கூடுகிறது.ஆகவே இத்தகைய பண்டிகைகளுக்குப் பிறகு ,உடலின் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாகும்.


விரதத்தை கடைபிடியுங்கள்:


பண்டிகைகளுக்கு பிறகான நாட்களில்,ஏதாவது ஒரு வேலை,திட உணவை உட்கொள்ளாமல்,காய்கறி சாறு அல்லது பழச்சாறு அல்லது சூப்புக்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது என்பதும்,நம்முடைய உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு,கலோரிகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற துணை புரியும்.


அசைவம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிருங்கள்:


கொண்டாட்டங்களுக்கு பிறகான நாட்களில்,ஒரு மாத காலத்திற்கு, அசைவ உணவுகளை தவிர்த்து விடுங்கள்.இதன் மூலம் உடம்பில் அதிகப்படியாக தங்கி இருக்கும் கொழுப்பானது,உடம்பால் ஜீரணிக்கப்பட்டு,அதிகம் சாப்பிட்டதாலும் மகிழ்ச்சியின் காரணமாகவும் கூடியிருக்கும் கொழுப்பை உங்கள் உடலில் சமன்படுத்தும். வயிறானது அசைவ உணவுகளை செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதோடு இவற்றை கொழுப்புகளாகவும் மாற்றி விடுகிறது.


சிறிய அளவில் உடற்பயிற்சியை செய்யுங்கள்.
எடை இழப்பிற்கு, முக்கியமாக விளங்கும் உடற்பயிற்சியை,அவசியம் செய்யுங்கள் மிதிவண்டி ஓட்டுவது, நடப்பது மற்றும் நீச்சல் அல்லது வேறு ஏதேனும் ஒரு விளையாட்டு என, கண்டிப்பாக ஒரு மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகளை செய்யுங்கள். இதனால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதோடு,கொழுப்பும் குறைகிறது.மேலும்  வியர்வை வழியாகவும்,உடலுக்கு தேவையில்லாத நச்சுக்கள் வெளியேறுகின்றன.


எலுமிச்சை சாறு அல்லது தினமும் ஒரு மூலிகை சூப்பை குடியுங்கள்:


எலுமிச்சை சாறு,திராட்சைச் சாறு, நெல்லி சாறு அல்லது ஆரஞ்சு சாறு என ஏதேனும்,சிட்ரிக் நிறைந்த பழச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களது கொழுப்பை கரைப்பதற்கு பயன்படுவதோடு, செரிமான பிரச்சனைகளையும் சரி செய்து,உடலை இலகுவாக்குகிறது. இதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறுகிறது. இத்தகைய சிட்ரிக் சார்ந்த உணவுகளை வாயு கோளாறு மற்றும் அரசியல் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக உணவருந்திய பின் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.


காய்கறிகள் மற்றும் கீரைகளை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்:


இப்படியான பண்டிகைகளுக்கு பின்வரும் காலங்களில் ஒரு வேலை கண்டிப்பாக சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு பச்சை ஆகவோ அல்லது சமைத்த காய்கறிகள் மற்றும் கீரைகளை உங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். 


பாதுகாப்பான வயிற்றுப்போக்குக்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்:


நமது உடலில் உள்ளுறுப்புகள் நன்கு இயங்குவதற்கு, ஓய்வு மற்றும் கழிவு நீக்கம் அவசியம் தேவைப்படும்.கழிவு வீக்கத்திற்கு சித்த வைத்தியர்கள் அல்லது மருத்துவரின் ஆலோசனையை பெற்று,மாதம் ஒருமுறை எனும் வயிற்றுப்போக்குக்கு,மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள்.இதன் மூலமும் உடலில் சேர்ந்து இருக்கும் தேவையில்லாத கழிவுகள் வெளியேறும்.


இத்தகைய யோசனைகளை பின்பற்றுவதன் மூலம், பண்டிகை காலங்களுக்கு பிறகான உங்கள் உடல் நிலையை எளிதாக சரி செய்துகொள்ள முடியும்.