கிருஷ்ண ஜெயந்தி 2023:


கம்சனை அழிக்க விஷ்ணு எடுத்த கிருஷ்ண அவதாரமே கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi) என்ற பெயரிலும், கோகுலாஷ்டமி என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி வரும் 6-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி மிக மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டில் பலகாரங்கள் செய்யப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணெய், அவல், பால், பழங்கள், தயிர், வெல்ல சீடை, கார சீடை போன்றவைகள் நிவேதன் செய்யப்படும்.  அதில், வெல்ல சீடை எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:


பச்சரிசி - 1 1/2 கப்


கருப்பு வெல்லம் - 1 கப்


தேங்காய் துருவியது - 1/2 கப்


கருப்பு எள் - 1/2 கப்


வெள்ளை எள் - 1/2 கப்


நெய் - 2 ஸ்பூன்


வறுப்பதற்கு எண்ணெய்


செய்முறை:


முதலில் பச்சரிசியை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நன்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அதன்பின் மிக்ஸியில் அறைத்து ஜல்லடையில்  மாவை பொடித்துக் கொள்ளவும். இப்படி செய்வதால் மாவுகள் உதிரியாக இருப்பதை தவிர்க்கலாம். அடுத்ததாக கடாயில் வெல்லத்தை உருக வைக்க வேண்டும். அப்போது, சிறிது தண்ணீர் ஊற்றி உருக வைக்க வேண்டும். அப்படி செய்தால், கெட்டியான பதத்தில் இல்லாமல் வெல்ல நன்றாக உருகும். வெல்லத்தை கெட்டி பதத்திற்கு உருக வைக்கமால், கட்டிகளின்றி உருகியதும் இறக்கிவிட வேண்டும்.  அதன்பின், எள்ளை கடாயில் வறுக்க வேண்டும். இதனை அடுத்து, வறுத்த எள்ளையும், மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்க வேண்டும். இதோடு, உருகிய வெல்லத்தையும்  தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும். இதனை நன்றாக கலந்துவிடவும்.  சீடை இன்னும் சிறப்பாக வேண்டும் என்றால், சீடை சுடுவதற்கு ஒருநாள் முன்பே மாவை தயார் செய்து வைக்க வேண்டும். 


பிசைந்து வைத்த மாவை சின்னதாக உருண்டை பிடிக்க வேண்டும். உருண்டை பிடிக்கும்போது மாவு கையில் ஒட்டாமல் இருக்க நெய்யை உள்ளங்கையில் தடவிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக, எண்ணெய்யை கடாயில் ஊற்றி, உருண்டை பிடித்து வைத்த மாவை எண்ணெய்யில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும். பொன்னிறமாக வந்துவிட்டதே என நினைத்து உடனே எடுக்க வேண்டாம். உள்ளுக்குள் இருக்கும் மாவு வேகமால் இருக்கும். இதனால் நன்கு வறுத்து எடுக்க வேண்டும். சில நேரங்களில் வறுக்கும்போது உருண்டைகள் வெடிக்க வாய்ப்பிருக்கு. இதனால் பொறுமையாக இதனை கையாள வேண்டும். எனவே, பொன்னிறமாக வந்தவுடன் மெதுவாக எடுத்து ஒரு பாத்திரத்தில் சூடு தனியும் வரை காற்றோட்டமாக வைக்க வேண்டும். சூடு தணிந்ததும் மற்ற பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு பரிமாறலாம். 




மேலும் படிக்க 


Krishna Jayanthi 2023: கிருஷ்ண ஜெயந்தி எப்போது? கம்சனை வதம் செய்த கண்ணன் தோன்றியது எப்படி?


Krishna Jayanthi 2023: ஸ்ரீ கிருஷ்ணர் ஜென்ம தினப்பூஜைக்கு ரெடியா? வீட்டிலே கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்வது எப்படி?