பிற டயட்களோடு ஒப்பிடுகையில், மிகச்சரியாக பின்பற்றப்படும் போது கீட்டோ டயட் மிகச் சிறப்பான பணியைச் செய்கிறது.
உடல் எடைக் குறைப்பு பொருள்கள் விற்கப்படும் சர்வதேச சூழலில், மக்களின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எடை குறைப்பு பொருள்கள் உறுதியளிக்கும் மாற்றங்களை மக்கள் பெறவில்லை என்றால், அதன் மீதான மோகம் குறைவதோடு, மக்கள் அதனை வாங்குவதைத் தவிர்க்கின்றனர்.
பி.எம்.எஃப்.டி ட்ரெய்னிங் நிறுவனத்தை உருவாக்கியவரும், ஃபிட் இந்தியா இயக்கத்தின் தூதருமான முகுல் நாக்பால் தொடர்ந்து கீட்டோ டயட் குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார். `உடல் எடைக் குறைப்பில் இரண்டு வகையான நேர நிலைகள் இருக்கின்றன. குறைந்த நாள்களில் எடை குறைப்பது முதல் நிலை.. அதன் மீது கவனம் செலுத்துவது கடினம்.. நீங்கள் டயட்டில் ஈடுபட்டால், முதல் மூன்று வாரங்களில் சற்றே உடல் எடையைக் குறைக்கலாம்.. சூப்பர்! ஆனால் இங்கு பிரச்னை என்னவென்றால், இதே எடையை எப்படி ஆயுள் முழுவதும் நீட்டிப்பது என்பது தான்!’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், `இந்த வழியிலான உரையாடல் ஏற்பட்டவுடன், பெரும்பாலானோர் தங்கள் பழைய டயட்டுக்கே திரும்பி விடுவது வழக்கம்.. இதற்கான காரணம் எளிமையானது.. நாம் நம்மை மாற்றிக் கொள்ள நினைக்கும் போது நம்மை எதிர்க்கத் தொடங்குகிறோம்.. நாம் சில உணவுப் பழக்கங்களை வாழ்க்கைப் பழக்கமாக வைத்திருப்போம்.. நாம் நமது பழக்கங்களினால் உருவாக்கப்பட்டவர்கள்.. எனவே நாம் பல சாக்குகளைச் சொல்லி நம்மை சமாளித்தாலும், நாம் பழக்கங்களினால் உருவாக்கப்படுபவர்களே.. கீட்டோ டயட்டைப் பொருத்த வரையில், நாம் வழக்கமாக இதனை சாப்பிடக் கூடாது என வருந்தும் பொருள்களை வயிறாற உண்பதற்காக வழி செய்வதே கீட்டோ டயட்டின் சிறப்பம்சம்’ எனக் கூறியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட வரைமுறைக்குள் இருந்து நமக்கு பிடித்தவற்றை உண்ணும் வசதியை கீட்டோ டயட் வழங்குகிறது. இந்த வரையறையைத் தீவிரமாக கடைப்பிடிப்பதன் மூலம், உங்களுக்குப் பிடித்த உணவுகளின் மீதான பிரியமே உங்கள் எடைக் குறைப்புக்கு உதவி செய்யும்.
முகுல் நாக்பால், `பிற டயட்களைப் போலவே கீட்டோ டயட்டிலும் குறைந்த காலத்தில் எடை குறைப்பை மேற்கொள்ள முடியும்.. ஆனால் இதனை சிறப்பானதாக மாற்றுவது என்னவென்றால், இது நிலையான எடை குறைப்பை வழங்குகிறது.. எவ்வளவு எடை குறையும் என்பதைத் துல்லியமாக என்னால் சொல்ல முடியாது.. ஆனால் கீட்டோ டயட் மீது கமிட்மெண்ட் கொண்டு அதனை அர்ப்பணித்துக் கொண்டால், நிச்சயம் எடை குறையும் மாற்றத்தைக் காணலாம்’ எனவும் கூறியுள்ளார்.
இந்த உணவில், நீங்கள் அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுவதில்லை. கொழுப்புகள் மிக அதிக அளவில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கீட்டோ ஷேக்ஸ், சீஸ், ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் உட்கொள்ளப்படுகின்றன. பழங்கள் கிடையாது. புரத சத்திற்காக, கோழி, மட்டன், மீன், தேங்காய் எண்ணெய் ஸ்மூத்தி ஆகியவவை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.