வெயில் காலம் வந்துவிட்டாலே, சூரியனில் தாக்கம் நம்மை சுட்டெரிக்க ஆரம்பித்துவிடும். இந்த ஆண்டு, ஆரம்ப நேரத்திலேயே வெயில் கொடுமை அதிகமாகவே இருக்கிறது. அந்த சமயம் அடிக்கடி பசி இன்மையும், அதிக தண்ணீர் தாகம் ஏற்படுவதையும், நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் உடல் சூடும் அதிகரித்திருக்கும். சிலருக்கும், உதட்டில் வெடிப்பு, அல்சர், புண்கள் நாக்கு வறட்சி உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். காரமான உணவுகளை உட்கொள்வது இந்த நேரத்தில் கூடுதல், பாதிப்பை தரலாம். எனவே, கோடை காலத்தில் நம்முடை உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவது அவசியம். அதேபோன்று, நாம் மாற்றம் கொண்டு வரும் உணவு  ஊட்டச்சத்து அதிகம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.



முன்முன் என்னும் இன்ஸ்டாகிராம் பிரபலம் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேரள பாரம்பரிய உணவான உளுவா கஞ்சி எனப்படும் வெந்தயக்கஞ்சியின் செய்முறையைப் பகிர்ந்துள்ளார். வீடியோ ஒன்றை வெளியிட்டு, இந்த ரெசிபியின் செயல்முறையை விவரித்தார். அதோடு இதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை கீழே எழுதி இருக்கிறார். இதனை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இதனை செய்வதற்கு பெரிதாக பொருட்கள் ஒன்றும் தேவையில்லை என்றும், எளிதாக செய்யலாம் என்றும் குறிப்பிட்ட அவர், அதற்கு தேவையான பொருட்களை கூறினார்.



  • உடைத்த அரிசி - 1 கப்

  • ஊறவைத்த வெந்தயம் - 2 டீஸ்பூன்

  • ஊறவைத்த சீரகம் - 1.5 டீஸ்பூன்

  • துருவிய தேங்காய் - 1 கப்

  • வெல்லம் சிரப் - ¾ கப்

  • நெய் – 1 டீஸ்பூன்

  • ஆலிவ் விதைகள் (கார்டன் க்ரெஸ் விதைகள்)

  • உப்பு - ருசிக்கேற்ப






அப்படியான நெஞ்சு எரிச்சல், வயிற்றுப் புண்களை சரி செய்யும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கூடிய வெந்தய கஞ்சி ரெசிபி செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 



  • வெந்தயம் மற்றும் சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும், காலையில் தண்ணீரை எடுத்துவிடவும்.

  • இப்போது, ஒரு பிரஷர் குக்கரை எடுத்து, அதில் உடைத்த அரிசியைச் சேர்க்கவும். அடுத்து அதில் துருவிய தேங்காய் மற்றும் ஊறவைத்த வெந்தயம் மற்றும் சீரகம் சேர்க்கவும்.

  • இந்த கலவையில் 5 கப் தண்ணீர் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  • கஞ்சி இனிப்பாக வேண்டும் என்றால் சிறிது சர்க்கரை சிரப் சேர்க்கவும், இல்லையெனில், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  • ஒரு தட்டில் சிறிது நெய் வார்த்து பரிமாறவும்.

  • ஆலிவ் விதைகளை 2-3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அவை பெரிதானதும் வெந்தயக் கஞ்சியில் சேர்க்கலாம்.