தோசை தென்னிந்திய உணவு வகைகளில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது என்றாலும் அதற்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஒரு தட்டில் முறுவலான தோசை, சாம்பார், சட்னி வைத்துக் கொடுத்தால் அதற்கு வேண்டாம் என்று சொல்லுபவர்கள் இருக்கவே முடியாது. சுவையான உருளைக்கிழங்கு மசாலாவுடன்  மிருதுவான தோசையை சாப்பிட விரும்பினாலும், தோசையின் கிளாசிக் வெர்ஷன் தென்னிந்தியாவில் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ளது. அதில் முக்கியமானது செட் தோசை.


செட் தோசை:


இது ஸ்பாஞ்ச் தோசை என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மென்மையான அப்பத்தை போன்ற மெல்லிய தோசையாகும், இது பஞ்சுபோன்றது மற்றும் சாப்பிடுவதற்கு லேசானது. செட் தோசை பொதுவாக அளவில் சிறியது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட தோசைகளின் தொகுப்பில் பரிமாறப்படுகிறது  அதனால்தான் இதற்கு செட் தோசை என்று பெயர். இது ஒரு பிரபலமான காலை உணவாகும், மேலும் புளித்த மாவைக் கொண்டு இதனை விரைவாகச் செய்யலாம்.


ஆனால், புளித்த மாவு தயார் செய்து செட் தோசை செய்ய வேண்டும் என்பது நிறைய நேரம் எடுக்கும். பாரம்பரியமாக செட் தோசையானது போஹா இட்லி அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றின் கலவையுடன் தயாரிக்கப்படுகிறது, அவை வழக்கமாக ஒரே இரவில் புளிக்கவைக்கப்பட்டு, மறுநாள் காலை உணவுக்காக சமைக்கப்படும். இப்படி இரவு முழுவதும் வைத்திருக்காமல் உடனடியாகத் தயார் செய்யும் இன்ஸ்டன்ட் செட் தோசைக்கான ரெசிபி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 


செய்வது எப்படி?


இந்த உடனடி தோசை தயார் செய்ய பத்து நிமிடங்கள் மட்டுமே ஆகும் மற்றும் உடனடியாகப் பரிமாறலாம். பெங்களூரு போன்ற இடங்களில், தேங்காய் சட்னி மற்றும் சாகுவுடன் செட் தோசை பரிமாறப்படுகிறது.  ருசியான ஆரோக்கியமான செட் தோசையை உடனடியாகச் செய்ய விரும்ப மாட்டீர்களா என்ன? இந்த செய்முறையை பின்பற்றவும்.


உடனடி செட் தோசை செய்ய, முதலில், போஹாவை சில நிமிடங்கள் ஊறவைத்து, மிக்ஸி-கிரைண்டரில் ரவை, தயிர் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, தேவையான திக்னெஸுக்கு தண்ணீர் சேர்க்கவும். பிறகு சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு டம்ளர் மாவை நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி, கீழே இருந்து வேக விடவும். முடிந்ததும், தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு விருப்பமான ஏதேனும் சட்னியுடன் பரிமாறவும். கூடுதல் சுவைக்காக நீங்கள் சிறிது பொடி மசாலாவையும் தூவலாம். வெறும் 10 நிமிடங்களில், நீங்கள் ஒரு சுவையான தென்னிந்திய காலை உணவைத் தயார் செய்யலாம். நம்மூர்களில் செட் தோசை வடகறியுடன் பரிமாறப்படுகிறது. வடகறி என்பது ஓட்டல்களில் மிச்சமாகும் வடை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு உணவு