பனீர் புரதச்சத்து நிறைந்தது. இறைச்சி வகைகள் சாப்பிடாதவர்கள் பனீர் டயட்டில் சேர்க்கலாம். வீட்டிலேயே பனீர் எப்படி தயாரிப்பது? எளிதாக பனீர் டிக்கா செய்வது எப்படி? என்று கீழே காணலாம். பத்து நிமிடங்கள் பனீர் டிக்கா செய்துவிட முடியும். 


தேவையான பொருட்கள்:


பனீர் - 250கிராம்


பூண்டு - 2-3 


உப்பு - தேவையான அளவு


மிளகாய் தூள் - 1/4 டீ ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப பயன்படுத்தவும்)


மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை


சீரக தூள் - 1/4 டீஸ்பூன்


என்ணெய்  -தேவையான அளவு


செய்முறை:


பனீர் சிறிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டு தேவையெனில் இஞ்சி சேர்த்து இரண்டையும் விழுதாக்கவும்.


இப்போது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் பொடி, சீரக தூள், மஞ்சள் தூள் சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக கலக்கவும். இப்போது இந்த கலவையில் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும். பனீர் உடையாக இருக்க வேண்டும். இதை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.


இப்போது, அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். இப்போது மசாலா கலவை செய்து வைத்துள்ள பனீர் துண்டுகளை சேர்க்கவும். பனீர் பொன்னிறமானதும் எடுத்தால் பனீர் டிக்கா தயார். 


வீட்டீல் பனீர் தயாரிக்க தயிர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து தயாரிக்கலாம். எளிதான செயல்முறைதான்.


வீட்டில் பனீர் செய்வது எப்படி?


பனீர் தரமாகவும் சுவையாக இருக்க வேண்டும் என்றால் நல்ல கொழுப்பு அதிகமுள்ள பால் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. இல்லையெனில், பாலை நன்றாக கொதிக்க வைத்து காய்ச்ச வேண்டும். பால் நன்றாக சுண்டும் அளவிற்கு திக்கானதும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். 


தயிர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்ற அமில உணவுப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தவும். 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, சேர்க்க வேண்டும். பால் நன்றாக கொதித்த பிறகு சேர்க்கலாம். 


 பால் உடனடியாக திரியும். இல்லையெனில், தேவைப்பட்டால் மற்றொரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.


அடுப்பில் பாலை கொதிக்க வைத்துகொண்டே வினிகர்/எலுமிச்சை சாறு சேர்த்தால் கவனமாக இருக்கவும். ஏனெனில், கூடுதல் நேரம் கொதிக்க வைத்தால் பனீர் கெட்டியாக ஆகிவிடும். மிருதுவாக இருக்க வேண்டும் இல்லையா!


திரிந்த பாலை வடிகட்ட வேண்டும். இப்போது, ஒரு பாத்திரத்தில்  வடிகட்டி வைத்து, அதன் மேல் சுத்தமான துணியை வைத்து பயன்படுத்தி திரிந்த பாலை வடிகட்டவும். இதற்கு பயன்படுத்தும் துணி மெலிதாக இருக்க வேண்டும். அப்போதுதான் தேவையில்லாத தண்ணீர் முழுவதுமாக வடியும்.


வடிகட்டிய பாலாடை மீது குளிந்த தண்ணீரை சேர்த்து நன்றாக வடிகட்டி வேண்டும். இது வினிகர் அல்லது எலுமிச்சை சாறு வாசனை நீங்க உதவும்.


துணியை இறுக்கி ஒரு முடிச்சுப் போட்டு,  30 நிமிடங்கள் வரை தொங்கவிடவும். தண்ணீர் முழுமையாக வடிந்ததும் கன்மான பொருளுக்கு கீழே துணியை வைத்து செட் செய்தால் பனீர் ஷேப் கிடைத்துவிடும். இதை ஃப்ரீசரில் 5-6 மணி நேரம்  வைத்து எடுத்து பயன்படுத்தலாம்.