ஒயின் குடித்தால் பளபளப்பாகிவிடலாம் என்று கூற கேட்டிருப்போம்… உண்மைதான். தோலை பளபளப்பாக வைப்பதற்கு, அதிக முயற்சியும் சரியான தோல் பராமரிப்பும் தேவைப்படுகிறது. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் அதற்கு அதிக கவனம் தேவை! நம் சருமத்தை நாம் எப்படி எப்போதும் மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவது என்று யோசிக்க வேண்டும். ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்திற்கு ஒயின் ஒரு முக்கிய காரணி. சோர்வான நாளில் ஒரு கிளாஸ் ஒயின் குடித்தால் கவலை மற்றும் மன அழுத்தம் குறையும் என்று நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ரெட் ஒயின் உங்கள் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?


ஃபிளாவனாய்டுகள், ரெஸ்வெராட்ரோல் மற்றும் டானின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய ரெட் ஒயின், உங்கள் சருமத்தில் கொலாஜனை மீட்டெடுப்பதன் மூலம் சருமத்தை வயதாகாமல் பாதுகாக்கிறது. ரெட் ஒயின் உட்கொள்வதனால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள் இங்கே.



வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது


ஃபிளாவனாய்டு, ரெஸ்வெராட்ரோல் மற்றும் டானின்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் கலவை கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் மற்றும் மாசுபாட்டிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. ரெட் ஒயினில் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால், அதனை உட்கொள்ளுதல் வயதான விளைவுகளை குறைக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது. இன்னும் அதிகமாக பளபளப்பை எதிர்பார்ப்பவர்கள் உங்கள் முகம் மற்றும் கழுத்தில் ரெட் ஒயினை தடவலாம்.


தொடர்புடைய செய்திகள்: இனி திரைப்படங்களில் நடிக்கமாட்டேன்.. மாமன்னன் திரைப்படம்தான் கடைசி’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


முகப்பருவை குறைக்கிறது


ரெட் ஒயினில் அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன, அவை முகப்பருவை எதிர்த்துப் போராடவும் தோலில் இருந்து துளைகளை அழிக்கவும் உதவுகின்றன. ரெட் ஒயினில் காணப்படும் இந்த பண்புகள் முகப்பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது மற்றும் உங்கள் சருமத்தை சுத்தமாகவும் தெளிவாகவும் காட்டுகின்றன. முகப்பரு மற்றும் துளைகளை குறைக்கவும் ரெட் ஒயினை முகத்தில் தடவலாம்.



பளபளப்பான சருமம்


ரெட் ஒயின் சிறந்த தோல் பராமரிப்பு சிகிச்சை மருந்தில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் மாசுபாடு காரணமாக அடிக்கடி நாம் இழக்கும் முக பிரகாசத்தை மீண்டும் பெற உதவுகிறது. எனவே, ரெட் ஒயின் மன அழுத்த நிலைகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைப்பதன் மூலம் தோல் நிறத்தை சமன் செய்ய சிறந்த வழியாக கருதப்படுகிறது.


ரெட் ஒயின் ஃபேஸ் மாஸ்க்


ரெட் ஒயின் ஃபேஸ் மாஸ்க்கைத் தயாரிக்க, 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் ரெட் ஒயின் பயன்படுத்த வேண்டும். அவற்றை கலந்து முகத்தில் தடவவும். நல்ல ரிசல்ட்டை பெற இந்த கலவையை உங்கள் தோலில் குறைந்தது 10 நிமிடங்கள் வைத்து பின்னர் கழுவ வேண்டும்.