உடல் எடையை குறைக்கும் போது, உணவு முறையை பின்பற்றுவது போதாது. ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதை நிர்வகிப்பது மிகவும் முக்கியம். உடல் எடையை குறைக்க நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளை விட அதிக கலோரிகளை எரிக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. உணவுக் கட்டுப்பாடு மூலம் ஒருவர் இதனை அடைய முடியும். அடிக்கடி சின்னச் சின்னதாக  உணவுகளை உட்கொள்வது பசியின்மையை குறைக்கிறது, உங்கள் உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துகிறது, ஆற்றலை வெளியிடுகிறது, வளர்சிதை மாற்றம் குறைவதை தடுக்கிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்கிறது.


உடல் எடையைக் குறைக்க அப்படி நீங்கள் ஸ்நாக் செய்யப் பரிந்துரைக்கும் 6 சிறு உணவுகள் இங்கே -


ஒரு கிண்ணம் முளைகட்டிய பயறு


உடல் எடையை குறைக்க சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்ரைக்கின்றனர். இதில் அதிக நார்ச்சத்து மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மற்ற முளைக்கட்டிய பயறுகள் மற்றும் ஊறவைத்த பருப்புகளை ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளகு சேர்த்து அதை ஆரோக்கியமானதாகப் பரிமாறலாம்.


பல தானிய ரொட்டி சாண்ட்விச்கள்


முழு கோதுமை ரொட்டி, சிக்கன் துண்டுகள் அல்லது பனீர், கீரை அல்லது ப்ரோக்கோலி, தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற ஆரோக்கியமான பொருட்களைப் பயன்படுத்தி சாண்ட்விச்களை தயார் செய்யவும். இது மணிக்கணக்கில் பசி எடுக்காமல் இருக்கச் செய்யும்.




பாதாம் பருப்புடன் ஒரு கப் சோயா பால்


சிறந்த ஸ்நாக் உணவில் ஒன்று, பருப்புடன் பால் சாப்பிடுவது. சில பாதாம் பருப்புகளை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் ஒரு கிளாஸ் குறைந்த கொழுப்புள்ள பால் (அல்லது சோயா பால்) இதனுடன் அருந்துங்கள். இது எடைகுறைக்க எளிய வழி. 


மிருதுவான முட்டை டோஸ்ட் மற்றும் ஆம்லெட்


விரைவான சிற்றுண்டிக்கு, முட்டைகளால் செய்யப்பட்ட மிருதுவான உணவுகளுடன் வேறு எதுவும் போட்டியிட முடியாது.  ஒரு நாளின் எந்த நேரத்திலும் மினி உணவாக இதனைச் சாப்பிடலாம். எடையைக் குறைக்க, மஞ்சள் கருவை நீக்கி, முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் பயன்படுத்தவும்.


தயிர் மற்றும் பருப்புகள் 


எடை குறைக்க யோகர்ட் சிறந்தது. இதனுடன் பாதாம், காய்ந்த திராட்சை நறுக்கிய பழங்கள்  ஆப்பிள்கள், வாழைப்பழங்கள் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் கலந்து ஒரு பாத்திரத்தில் பரிமாறவும்.


வறுத்த கொண்டைக்கடலை அல்லது வேர்க்கடலை


நீங்கள் பசியை உணரும் போதெல்லாம் சாப்பிடுவதற்கு வறுத்த கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலை கலவையை ஒரு பெட்டியில் சேமிக்கலாம். இவை இரண்டு அதிக சத்து நிறைந்தவை, மேலும் கலோரிகளை சேர்க்காமல் ஆற்றலையும் வழங்குகின்றன.