ஒரு வைரஸ் அல்லது கிருமி உடலினுள் நுழைந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைவுறச் செய்யும் போது உடலில் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.பொதுவாக ஒரு நோய்க்கிருமியானது மூக்கு ,வாய் தொண்டை, நரம்பு ,நாளங்கள் இரைப்பை ,குடல் போன்ற அமைப்பு வரை சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு நோய் கிருமிகள் உடலினுள் சென்று இருமல் ,தும்மல் ,காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுக்களை பரப்புகிறது.
ஆகவே இவ்வாறான வைரஸ் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சிறந்த ஆயுர்வேத மூலிகைகளை மருந்தாக எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பொதுவாக இந்த ஆயுர்வேத மருத்துவத்தை, வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என கூறுவது உண்டு. இஞ்சி, துளசி ,தேன் போன்றன ,தற்போதைய காலத்தில் அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
துளசி:
மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படும் இந்த துளசி ஏராளமான நோய்களுக்கு நிவாரணியாக இருக்கிறது. அதனால் தான் மூலிகைகளுக்கு எல்லாம் அரசி என்று அதனை குறிப்பிடுகின்றனர். நோய் வருமுன் காத்து ,எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் ஒரு அற்புத ஆற்றல் வாய்ந்தது தான் இந்த துளசி. வெண்துளசி, கருந்துளசி, நாய்த்துளசி, செந்துளசி, நற்றுளசி என இதில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. சளி ,இருமல் காய்ச்சல் போன்றவற்றுக்கு மிகவும் சிறந்த நிவாரணியாக இந்த துளசி இருக்கிறது. இந்த துளசி சாறானது உடலின் வெப்ப மண்டலத்தை சீராக்கி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரி பண்ணி நோய்க்கிருமியை விரட்டிய அடிக்கிறது. ஆகவே தற்போது மழைக்காலம் என்பதால் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதோ மிகவும் முக்கியமானது.
சுவாச பகுதிகளில், சுவாச நாளங்களில் வரும் நோய்த்தொற்றை முறியடிக்க உகந்த சக்தி வாய்ந்த மூலிகைகளில் ஒன்று தான் இந்த துளசியாகும். இருமலை சரி செய்வது ,செரிமானத்தை சீராக்குவது ,கல்லீரலில் நச்சுத்தன்மையை அகற்றுவது மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுவிப்பது என பல்வேறு நன்மைகளை இந்த துளசி உடலுக்கு செய்கிறது. வைரஸை எதிர்த்துப் போராடும் பல நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை துளசி கொண்டுள்ளது.
இஞ்சி:
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் போன்ற நோய் எதிர்ப்பு பண்புகள் வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது. இருமல், சளி, தொண்டை வலி மற்றும் பல நோய்களுக்கு எதிராக இஞ்சி செயலாற்றுகிறது.
காலையில் தொடர்ந்து பூண்டு, தேன், துளசி கலந்து சாப்பிட்டு வர தோற்று நோய் கிருமிகள் தாக்கத்திலிருந்து நாம் விடுபடலாம். ஒவ்வொரு காலநிலை பருவ மாற்றங்களின் போதும் வைரஸ் தொற்றுகள் உடலை தாக்குகின்றன. ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில், துளசி, இஞ்சி மற்றும் தேன் போன்றவற்றை மருந்தாக உட்கொள்வது வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். துளசி, இஞ்சி மற்றும் தேன் ஆகியவற்றின் கலவையானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆற்றலை வழங்குகிறது.
இஞ்சி மற்றும் தேன் ஒருவரின் உடலை மிதமான வெப்பத்துடன் வைத்திருக்கும் மந்திரப் பொருள் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல் துளசியானது, கிருமிகளை எதிர்த்துப் போராடி நோய் தொற்றுகளை குணப்படுத்த உதவுகிறது.
இவ்வாறான ஆயுர்வேத மூலிகைகளில் கால்சியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி, துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், வைரஸ் தொற்றுகளை எளிதில் விரட்டி அடிக்கிறது.
இந்த குறிப்பிட்ட மூலிகைகளான இஞ்சி, துளசி, பூண்டு போன்றவற்றை துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் நன்கு வேக வைத்து அதனுடன் தேன் கலந்து அல்லது தேநீர் வடிவில் சாப்பிட உடல் ஆரோக்கியம் மேம்படும்.